/tamil-ie/media/media_files/uploads/2022/11/modi-biden-1.jpg)
இந்தோனேசியாவில் நடைபெற்ற G-20 உச்சிமாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று ரஷ்யா-உக்ரைன் போரில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் எந்த கட்டுப்பாடுகளையும் ஊக்குவிக்காததன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
“யுக்ரைனில் போர் நிறுத்தம் மற்றும் இராஜதந்திர பாதைக்கு திரும்புவதற்கான வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று நான் பலமுறை கூறியுள்ளேன். கடந்த நூற்றாண்டில், இரண்டாம் உலகப் போர் உலகில் அழிவை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு, அன்றைய தலைவர்கள் அமைதிப் பாதையில் செல்ல தீவிர முயற்சி மேற்கொண்டனர். இப்போது இது நமது முறை. கொரோனா காலத்திற்குப் பிந்தைய காலத்திற்கு ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களில் உள்ளது,” என்று மோடி குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு உச்சிமாநாட்டைத் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு ஜி-20 தலைவர் பதவியை இந்தியா ஏற்கும். இந்தச் சூழலில், உலகில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த, உறுதியான மற்றும் கூட்டுத் தீர்மானத்தைக் காட்டுமாறு ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். "அடுத்த ஆண்டு புத்தர் மற்றும் காந்தியின் புனித பூமியில் G20 நாடுகள் சந்திக்கும் போது, உலகிற்கு அமைதிக்கான வலுவான செய்தியை தெரிவிக்க நாம் அனைவரும் ஒப்புக்கொள்வோம்" என்று மோடி கூறினார்.
திங்கள்கிழமை தாமதமாக பாலிக்கு வந்த மோடி, ”காலநிலை மாற்றம், கோவிட் -19 தொற்றுநோய், உக்ரைனின் போர் நிலவரம் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் "சிக்கல்களில்" இருப்பதால், அதனுடன் தொடர்புடைய உலகளாவிய பிரச்சினைகள் உலகில் அழிவை ஏற்படுத்தியுள்ளன. அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உலகளவில் மக்களைப் பாதித்துள்ளது. உலகம் முழுவதும் முக்கிய பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் நெருக்கடி உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஏழை குடிமக்களுக்கான சவால் மிகவும் கடுமையானதாகிவிட்டது. அன்றாட வாழ்க்கை ஏற்கனவே அவர்களுக்கு ஒரு போராட்டமாக இருந்தது," என்று மோடி கூறினார்.
ஆற்றல் பாதுகாப்பு பற்றி
அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் போன்ற மேற்கத்திய தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், எரிசக்தி பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி கோடிட்டுக் காட்டினார்.
PM @narendramodi and @POTUS @JoeBiden interact during the @g20org Summit in Bali. pic.twitter.com/g5VNggwoXd
— PMO India (@PMOIndia) November 15, 2022
"உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா இருப்பதால், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உலக வளர்ச்சிக்கு முக்கியமானது. எரிசக்தி விநியோகத்தில் எந்த தடையையும் நாம் ஊக்குவிக்கக்கூடாது மற்றும் எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறினார். இந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து பல நாடுகளால் புறக்கணிக்கப்பட்ட ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கான அதன் முடிவுக்காக இந்தியா மேற்கத்திய நட்பு நாடுகளின் விமர்சனங்களை எதிர்கொண்டது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை, இந்தோனேசிய அமர்வில் புதினின் சார்பாக வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் கலந்துக் கொண்டார்.
தூய்மையான ஆற்றலுக்கான அர்ப்பணிப்பு
தூய்மையான எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கு இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.
PM @narendramodi arrives at the @g20org Summit. He was welcomed by President @jokowi. The Summit will witness extensive deliberations on ways to overcome important global challenges. It will also focus on ways to further sustainable development across our planet. pic.twitter.com/G6dv1RmGue
— PMO India (@PMOIndia) November 15, 2022
“2030ஆம் ஆண்டுக்குள் நமது மின்சாரத்தில் பாதி புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும். காலக்கெடு மற்றும் மலிவு நிதி மற்றும் வளரும் நாடுகளுக்கு தொழில்நுட்பத்தின் நிலையான வழங்கல் ஆகியவை உள்ளடங்கிய ஆற்றல் மாற்றத்திற்கு அவசியம்,” என்று மோடி கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஜி20 நாடுகளின் முக்கியத்துவம் குறித்து மோடி பேசுகையில், "உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் ஐ.நா போன்ற பலதரப்பு நிறுவனங்கள் தோல்வியுற்றன என்பதை ஒப்புக்கொள்ள நாம் தயங்கக் கூடாது." என்று கூறினார்.
இன்று உலகம் G-20 இலிருந்து அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது, மேலும் நமது குழுவின் பொருத்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது, என்று மோடி கூறினார்.
கூடுதல் தகவல்கள் : பி.டி.ஐ
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.