Prince Charles Praises India’s sustainable way of life : இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா க்ளோபல் வீக் 2020 உச்சி மாநாட்டில் பங்கேற்றேர். லண்டனில் இருந்து அவர் காணொலி காட்சி மூலம் பங்கேற்ற அவர் இந்தியாவின் நிலையான வாழ்க்கை முறை குறித்து புகழ்ந்து பேசினார். மேலும் அவர் இந்தியாவின் தத்துவவியல் நிலைதன்மையான வாழ்வை உறுதி செய்கிறது என்று கூறினார். நரேந்திர மோடியுடன் உரையாடியதாக கூறும் அவர் சுயசார்புடன் வாழ்வதன் முக்கியத்துவதை பற்றி பேசியதாக கூறினார்.
உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவிடம் இருந்து அபரிகிரகா என்ற (உடைமை கொள்ளாத நற்குணம், பேராசையில்லாத தன்மை) பண்டைய யோக ஞானத்தை கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது . இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் நம்பிக்கை அவரை தனிப்பட்ட முறையில் கவர்ந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜூலை 9ம் தேதியில் இருந்து ஜூலை 11ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் மொத்தம் 75 செசன்கள் நடைபெற்று வருகிறது. உலகளாவிய அரசியல், வர்த்தகம், வளர்ந்து வரும் தொழில்நுட்பம், வங்கி சேவை, நிதி, பாராமெடிக்கல், ராணுவம் மற்றும் பாதுகாப்பு, கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளிலும் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்வில் இதுவரை 5000 நபர்கள் வரை பங்கேற்றுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil