மேகன் மார்கில்லை கரம் பிடித்தார் இளவரசர் ஹாரி....!

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் திருமணம்  லண்டன் வின்ட்சார் கோட்டையில் பிரம்மாண்டமாக  நடைபெற்று வருகிறது.

மாலை  5.10:  மேகன் மார்கில்லின் கையில் அரச மோதிரத்தை அணிந்து  அவரை மனைவி ஆக்கினார் இளவரசர் ஹாரி.

மாலை 4.50: மணமக்களிடம்  இறுதி சம்மதத்தை கேட்ட தருணம்!

 

 

 

 

 

மாலை 4. 30:  மணமகள்  மேகன் மார்கில் திருமண கோலத்தில் கோட்டைக்கு வருகை

 

 

மாலை 4.10: இளவரசர் ஹாரி வின்ட்சார் கோட்டைக்கு வருகை

@priyankachopra in custom @viviennewestwood #styledbymimicuttrell

A post shared by Mimi Cuttrell (@mimicuttrell) on

 

மாலைள் 4.00  : இளவரசர் ஹாரியின் திருமணத்தில் பங்கேற்க பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகையான  பிரியங்கா சோப்ரா  லண்டன் கோட்டைக்கு வருகை தந்தார்.

 

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இளைய மகன் இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்க டெலிவிஷன் நடிகை மேகன் மார்கிலுக்கும் இன்று லண்டன் கோட்டையில்  திருமணம் நடைபெறுகிறது. ஹாரியும் மேகனும் பல வருடங்களாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதல் விவகாரம் குறித்து  ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. அதன் பின்பு, ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் இவர்களின் திருமணத்திற்கு பச்சை கொடி காட்டினார். இதையடுத்து அவர்களது திருமணம் நிச்சயமானது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 15 ஆம்  நூற்றாண்டில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று மதியம் இளவரசர் ஹாரி-மேகன் திருமணம் கோலாகலமாக நடைபெறகிறது. இதற்கான ஏற்பாடுகள்  தீவிரமாக  நடைபெற்றுவருகின்றன. இவர்களின் திருமணத்தை   கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி நடத்தி வைக்கிறார்.

ஹாரியின் திருமணத்தையொட்டி  லண்டன் நகரமும் முழுவதும் விழாக்கோலம்  பூண்டுள்ளது.  இளவரசரின் திருமணத்தை காண பல்வேறு நாடுகளிலிருந்தும் அதிக மக்கள் வந்துள்ளாதால், லண்டனில் தங்குவதற்கு அறைகள் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.   லிண்ட்சர் நகரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் முன்னதாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அதை சுற்றியுள்ள இடங்களில் இருக்கும் விடுதிகளும் முழுமையாக நிரம்பிவிட்டது.

இருந்த போதும், மக்கள் பலர், சாலையோரங்களில் தற்காலிகமாக டெண்ட் அமைத்து தங்கியுள்ளனர்.  ஹாரியின் திருமணத்திற்காக பிரேத்யேகமாக கேக் தயாராகி வருகிறது. லண்டனை சேர்ந்த பேக்கரி உரிமையாளர் கிளேர் டக் என்பவர் திருமணத்துக்கான கேக்கை உருவாக்க உள்ளார்.

திருமணத்தின் சாரெட் வண்டியின் ஊர்வலத்திற்காக பிரிட்டன் ராணுவத்தினர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.  திருமணத்தில் பங்கேற்க சுமார் சுமார் 600 பேருக்கு அழைப்பிதழ் தரப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர். அத்துடன், இளவரசரின் திருமணம் லண்டன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பரப்படுகின்றன.

இளவரசர் ஹாரி  – மேகன் மார்கிலு திருமணம் நேரலையில்… 

 

 

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close