Prince Harry tells Oprah he worried history would repeat itself : கடந்த வருடம் அதிகாரப்பூர்வமாக அரசு சேவைகள்ளில் இருந்து வெளியேறினார்கள் இங்கிலாந்தின் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன். பின்பு கலிஃபோர்னியாவில் தங்களின் இல்லற வாழ்வை துவங்கியுள்ளனர். மிக பிரபல பேச்சாளரான ஒப்ரா வின்ஃப்ரையின் நேர்காணலில் இருவரும் பேச இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்கள், கடந்த கால வரலாற்றில் ஏற்பட்ட பிழைகள் மீண்டும் ஏற்படலாம் என்று தன்னுடைய வருத்தத்தை ஹாரி பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
மார்ச் 7ம் தேதி ஒளிபரப்படும் இந்த நிகழ்வில் அவர்கள் இருவரும் பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
தங்களின் இரண்டாவது குழந்தையின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் மேகன் மற்றும் ஹாரி ஓப்ராவின் நிகழ்ச்சியில் பல்வேறு விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தன்னுடைய அம்மா டையானா, இது போன்ற சூழலில் எவ்வாறு நடந்திருப்பார் என்பதை என்னால் நினைத்து கூட பார்க்க இயலவில்லை என்று தன்னுடைய தாயார் டையானா, இங்கிலாந்தின் இளவரசியாக இருந்த போது அவர் சந்தித்த விசயங்கள் குறித்து பேசினார்.
”நீங்கள் இங்கு கூறியிருக்கும் சில விசயங்கள் நம்பே முடியாத அளவிற்கு இருக்கிறது” என்று அதிர்ச்சி தெரிவித்துள்ளார் வின்ஃப்ரே. கலிபோர்னியாவிற்கு இருவரும் செல்வதற்கு முன்பு, மேகனுக்கு அங்கே நடைபெற்ற விசயங்கள் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேகனின் தந்தை அமெரிக்கர், தாயார் ஆப்பிரிக்க – அமெரிக்கர். இதனால் அங்கு இனவெறி தாக்குதலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.