Advertisment

இளவரசருக்கு மனைவி மீது அவ்வளவு பயமா? சமோசாவை மறைத்து வைத்து செல்கிறார்!

மனைவிக்கு பயந்து ஹாரி சமோசாவை அதிகம் சாப்பிட முடியவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இளவரசர் ஹாரி

இளவரசர் ஹாரி

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, இளவரசிக்கு தெரியாமல் சமோசாவை மறைத்து வைத்து செல்லும் வீடியோக் காட்சிகள் சமுகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisment

இளவரசர் ஹாரி:

கதைகளில் கேட்டிருப்போம்.. இளவரசருக்கு பிரம்மாண்டமாக கல்யாணம் நடக்கும். அதை நாட்டு மக்களே கொண்டாடுவார்கள். ராணி தேவதை போல் வந்திருங்குவார் என்றெல்லாம். அதை 21 ஆம் நூற்றாண்டில் நேரிலியே காட்டியது இளவரசர் ஹாரியின் திருமணம்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இளைய மகன் இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்க டெலிவிஷன் நடிகை மேகன் மார்கிலுக்கும் கடந்த மே மாதம் (19. 5.18) லண்டன் கோட்டையில் பிரம்மாண்டமாக   திருமணம் நடைபெற்றது. ஹாரியும் மேகனும் பல வருடங்களாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதல் விவகாரம் குறித்து  ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. அதன் பின்பு, ராணி இரண்டாம் எலிசபெத்   இவர்களின் திருமணத்திற்கு பச்சை கொடி காட்டினார். இதையடுத்து அவர்களது திருமணம் நிச்சயமானது. அதன் பின்பு  இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 15 ஆம்  நூற்றாண்டில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இவர்களது திருமணம் நடைப்பெற்றது.

இளவரசர் ஹாரி –   மேகன் மார்கில்லின்  ஜோடியை கண்டு  கண்ணு வைக்காத  லண்டன் மக்களே இருக்கமாட்டார்கள். காதல் மழையில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட தருணங்கள்,   முத்த மழை போன்ற புகைப்படங்கள் லண்டனை தாண்டிய இந்திய ஊடகங்களிலும் அதிகளவில் பேசப்பட்டன.

இளவரசர் ஹாரி தனது திருமணத்திற்கு பிறகு காதல் மனைவியுடன்  சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில்,   சமீபத்தில்  லண்டனில் நடந்த வெளியீட்டு விழாவிற்கு இளவரசர் ஹாரி  இளவரசி மற்றும் அவரின் தாயாருடன் சென்றிருந்தார்.

அப்போது இளவரச குடும்பத்திற்கு பிடித்தமான உணவுகள் பரிமாறப்பட்டன. குறிப்பாக இந்த உணவில்  பரிமாறப்ப்ட்ட சமோசா ஹாரியுக்கு மிகவும் பிடித்த போயிற்று. ஆனால் மனைவிக்கு பயந்து ஹாரி சமோசாவை அதிகம் சாப்பிட முடியவில்லை.

இதனால், ஹாரி  இளவரசிக்கு தெரியாமல் சமோசாவை மறைத்து வைத்துக் கொண்டு சென்றார். இந்த காட்சிகள் அங்கிருந்த கேமிராவில் பதிவாகின.  தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமக பரவி வருகிறது.   இளவரசராக இருந்தாலும் அவர் மனைவிக்கு பயந்தே ஆக வேண்டும் என்கின்றனர் நெட்டிசன்கள்.

Prince Harry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment