Advertisment

ஈரானில் பெண்கள் ஹிஜாபை கழற்றி போராட்டம்... உலகச் செய்திகள்

ஈரானில் பெண்கள் ஹிஜாபை கழற்றி போராட்டம்; பாகிஸ்தான் வெள்ளத்தால் 16 மில்லியன் குழந்தைகள் பாதிப்பு; ஆப்கானில் பெண்களுக்கு கல்வி மறுப்பு – ஐ.நா கண்டனம்; செனகல் நாட்டுக்கு புதிய பிரதமர்... இன்றைய உலகச் செய்திகள்

author-image
WebDesk
New Update
ஈரானில் பெண்கள் ஹிஜாபை கழற்றி போராட்டம்... உலகச் செய்திகள்

இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.

Advertisment

ஈரானில் பெண்கள் ஹிஜாபை கழற்றி போராட்டம்

மேற்கு ஈரானில் சனிக்கிழமையன்று பல பெண்கள் தெருக்களில் இறங்கி, ஹிஜாப் ஒழுங்குமுறைகளைச் சரியாகப் பின்பற்றாததற்காக அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 22 வயது பெண் மஹ்சா அமினியின் மரணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தங்கள் ஹிஜாப்களைக் கழற்றினர்.

இதையும் படியுங்கள்: இந்து, சீக்கிய, முஸ்லீம் எதிர்ப்புக்கு அமெரிக்காவில் இடம் இல்லை – ஜோ பிடன் உறுதி

அமினியின் சொந்த ஊரான சாகேஸில் நடந்த போராட்டத்தின் போது, ​​ஈரானில் தண்டனைக்குரிய குற்றமான ஹிஜாப்களை கழற்றி பெண் போராட்டக்காரர்கள், ‘சர்வாதிகாரிக்கு மரணம்’ என்று கோஷமிட்டதை வைரலான சமூக ஊடக வீடியோக்கள் காட்டின.

மேற்கு மாகாணமான குர்திஸ்தானில் இருந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு அமினி தனது குடும்பத்தினருடன் உறவினர்களைச் சந்திப்பதற்காகச் சென்றதாகக் கூறப்படுகிறது, அப்போது அவர் பெண்களுக்கான ஆடைக் குறியீட்டை மீறியதாகக் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் வேனுக்குள் அமினி தாக்கப்பட்டதாக சாட்சிகள் கூறியுள்ளனர், ஆனால், அதை அந்நாட்டு போலீசார் மறுத்துள்ளனர். இருப்பினும், கைது செய்யப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, அமினியின் குடும்பத்தினருக்கு அவர் காஸ்ரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது, அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார் என்று காவல்துறை கூறியது, ஆனால், அவர் கைது செய்யப்படும் வரை நல்ல ஆரோக்கியமாக இருந்ததாகக் கூறி குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

"மறு கல்வி அமர்வுக்கு" பிறகு அமினி விடுவிக்கப்படுவார் என்று அமினியின் குடும்பத்தினரிடம் கூறப்பட்டதாக ஈரானிய மனித உரிமைகள் அமைப்பான ஹ்ரானா கூறியதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் கடுமையான ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசி, எல்லா நேரங்களிலும் ஹிஜாப் அணிவது உட்பட பெண்களின் ஆடைக் குறியீட்டை கடுமையாக அமல்படுத்த உத்தரவிட்ட சில வாரங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்தது. அதை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளையும் விதித்தார்.

பாகிஸ்தான் வெள்ளத்தால் 16 மில்லியன் குழந்தைகள் பாதிப்பு

பாக்கிஸ்தானில் "சூப்பர் வெள்ளத்தால்" சுமார் 16 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, அவர்களில் குறைந்தது 3.4 மில்லியன் குழந்தைகளுக்கு உடனடி உயிர்காக்கும் உதவி தேவைப்படுவதாக ஐ.நா. கூறியுள்ளது.

publive-image

வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல் மற்றும் பல வலிமிகுந்த தோல் நோய்களுடன் போராடும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியத்தின் (யுனிசெப்) பிரதிநிதி அப்துல்லா ஃபாடில் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சிந்துவில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சமீபத்தில் இரண்டு நாள் பயணத்தை முடித்த ஃபாடில், வெள்ளம் தற்போது குறைந்தது 528 குழந்தைகளின் உயிரைக் கொன்றுள்ளது என்று கூறினார்.

ஆப்கானில் பெண்களுக்கு கல்வி மறுப்பு – ஐ.நா கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை ஐ.நா., ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளர்களுக்கு 7-12 வகுப்புகளில் உள்ள சிறுமிகளுக்கு பள்ளிகளை மீண்டும் திறக்க அழைப்பு விடுத்தது, அவர்கள் உயர்நிலைப் பள்ளியில் இருந்து விலக்கப்பட்டதன் ஆண்டுவிழாவை "வெட்கக்கேடானது" என்று அழைத்தது.

publive-image

ஐ.நா., கொள்கையானது, அடிப்படை சுதந்திரங்கள் மீதான மற்ற கட்டுப்பாடுகளுடன் சேர்ந்து, அதிக பாதுகாப்பின்மை, வறுமை மற்றும் தனிமைப்படுத்தல் போன்ற வடிவங்களில் நாட்டின் பொருளாதார நெருக்கடியை ஆழப்படுத்த பங்களிக்கும் என்பதில் அதிக அக்கறை காட்டுவதாக கூறியுள்ளது.

"இது ஒரு சோகமான, வெட்கக்கேடான மற்றும் முற்றிலும் தவிர்க்கக்கூடிய ஆண்டுவிழா" என்று ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. பணியின் செயல் தலைவர் மார்கஸ் பொட்செல் கூறினார்.

செனகல் நாட்டுக்கு புதிய பிரதமர்

செனகல் ஜனாதிபதி மேக்கி சால் சனிக்கிழமையன்று பிரதமர் பதவியை மீண்டும் ஏற்படுத்தி, முன்னாள் பொருளாதார அமைச்சரான அமடோ பாவை அந்தப் பதவியில் நியமித்தார்.

publive-image

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, கொரோனா தொற்றுநோய் மற்றும் உலகளாவிய வீழ்ச்சியிலிருந்து, மேற்கு ஆபிரிக்க நாடான செனகல் பொருளாதார நெருக்கடியுடன் போராடும் நேரத்தில் இந்த அறிவிப்பு வருகிறது.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு தீர்வு காண்பதற்கு புதிய பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் என்று ஜனாதிபதி சால் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment