scorecardresearch

பொருளாதார நெருக்கடி: இலங்கைக்கு உதவி செய்வது யார்?

ஆசிய வளர்ச்சி வங்கி, ஜப்பான் மற்றும் சீனா ஆகியவை மற்ற முக்கிய கடன் வழங்குநர்களாக உள்ளன.

பொருளாதார நெருக்கடி: இலங்கைக்கு உதவி செய்வது யார்?


இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் வெகுண்டு எழுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 2.2 கோடி பேர் வாழும் இலங்கையில், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போர், அன்னியச் செலாவணி கையிருப்பு தீர்ந்து போனது, கொரோனாவால் ஏற்பட்ட சவால் ஆகியவை காரணமாக இலங்கைக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் இலங்கை இறக்குமதியையே நம்பியிருக்கிறது.

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அந்நாட்டு அரசிடம் போதிய பணம் இல்லை.
இதனால், பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பால், காய்கறிகள், பருப்பு வகைகள் என அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

8 மணி நேரத்திலிருந்து 13 மணி நேரம் வரை மின்வெட்டு இருந்து வருகிறது. இந்த நெருக்கடியின் காரணம் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது.

பொருளாதார நிர்வாக சீர்கேடு காரணமாகவும், நடப்புக் கணக்கு பற்றாக்குறையுடன் பட்ஜெட் பற்றாக்குறை காரணமாகவும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் இலங்கையின் பொருளாதாரத்தை மிகவும் பாதித்த COVID-19 தொற்றுநோய்க்கு சில மாதங்களுக்கு முன்னர் அதாவது 2019 தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜபக்சே வரி குறைப்பு செய்யப்படும் என்று வாக்குறுதி தந்ததார். அதுவும் இன்றைய இலங்கையின் நிலைக்கு காரணமாகும்.

நாட்டின் இலாபகரமான சுற்றுலாத் துறை மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் கொரோனாவால் குறைந்தது. இலங்கையின் கடன் முகாமைத்துவத் திட்டத்தின் கீழ் சர்வதேச கடன் அமைப்புகளை அணுக இலங்கை திட்டமிட்டிருந்தது.

எனினும் அது நிறைவேறாமல் போனது. இந்த சூழ்நிலையில், அந்நிய செலாவணி கையிருப்பு இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 70 சதவீதம் சரிந்தது.

2021 ஆம் ஆண்டில் அனைத்து இரசாயன உரங்களையும் தடை செய்வதற்கான ராஜபக்ச அரசாங்கத்தின் முடிவு நாட்டின் விவசாயத் துறையையும் பாதித்தது. மேலும், முக்கியமாக நெல் பயிரில் வீழ்ச்சியை ஏற்படுத்தியது.

எனினும், இரசாயன உரங்களுக்கான தடை திரும்பப் பெறப்பட்டது. இலங்கையின் வெளிநாட்டுக் கடன் என்ன? பிப்ரவரி மாத நிலவரப்படி, நாட்டின் கையிருப்பில் $2.31 பில்லியன் மட்டுமே உள்ளது. ஆனால் 2022 இல் $4 பில்லியன் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கிறது.

இதில் ஜூலையில் முதிர்ச்சியடையும் $1 பில்லியன் சர்வதேச சவரன் பாண்ட் (ISB) அடங்கும். ISBக்கள் இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் 12.55 பில்லியன் டாலர்கள் அளித்து மிகப் பெரிய பங்கை வகிக்கின்றன.

ஆசிய வளர்ச்சி வங்கி, ஜப்பான் மற்றும் சீனா ஆகியவை மற்ற முக்கிய கடன் வழங்குநர்களாக உள்ளன.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட நாட்டின் பொருளாதார மதிப்பாய்வில், IMF பொதுக் கடன் “நீடிக்க முடியாத அளவிற்கு” உயர்ந்துள்ளது என்றும், அந்நிய செலாவணி இருப்புக்கள் கிட்டத்தட்ட டெர்ம் கடனை செலுத்துவதற்கு போதுமானதாக இல்லை என்றும் கூறியது.

இலங்கைக்கு யார் உதவுகிறார்கள்?

பல மாதங்களாக, ராஜபக்சேவின் நிர்வாகமும், இலங்கை மத்திய வங்கியும் (CBSL) வல்லுநர்களும் IMF இன் உதவியை நாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

எனினும், எதிர்க்கட்சியினரும், பொருளாதார வல்லுநர்களும் இந்த நிலைமை ஏற்படும் என்பதை தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்தனர். ஆனால் பிப்ரவரி பிற்பகுதியில் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததை அடுத்து எண்ணெய் விலைகள் உயர்ந்த பின்னர், இறுதியில் அரசாங்கம் ஏப்ரலில் IMF ஐ அணுகுவதற்கான திட்டத்தை முன்னெடுத்தது.

இலங்கை அதிகாரிகளுடன் “வரும் நாட்களில்” சாத்தியமான கடன் திட்டம் குறித்து விவாதங்கள் தொடங்கப்படும் என்று IMF செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதற்கிடையில், ராஜபக்சே சீனா மற்றும் இந்தியாவிடம் உதவி கோரியுள்ளார். குறிப்பாக எரிபொருள் உதவியை நாடியுள்ளார்.

‘வேகமாக பரவும் புதிய கோவிட் XE’ – WHO சொன்ன அதிர்ச்சி தகவல்

உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கையும் இந்தியாவும் $1 பில்லியன் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மேலும் ராஜபக்சே அரசாங்கம் இந்தியாவிடம் இருந்து குறைந்தது $1 பில்லியன் கோரியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: Rajapaksa has also sought help from china and india