தலைமறைவாகி இருந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே, மற்றும் அவரது மனைவியும் மால்தீவுக்கு தப்பிச்சென்றுள்ளனர்.
இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் போராட்டடம் வெடித்தது. கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே வசிக்கும் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இந்நிலையில் போராட்டக்கார்கள் மாளிகைக்குள் வருவதற்கு முன்னரே அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறி, இலங்கை கடற்படைக்கு சொந்தமான இரகசிய இடத்தில் பதுங்கியிருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் மக்கள் போராட்டத்தால் அவர் ஜூலை 13ம் தேதி பதவி விலகுவார் என்று கோத்தபய தெரிவித்ததாக நாடாளுமன்ற அவைத் தலைவர் மகிந்த யாபா அபேவெர்தனா தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் பதவி விலகிய பின் இடைக்கால அதிபராக நாடாளுமன்றத் தலைவர் அபேவர்தனா தேர்வு செய்யப்படுவார். இந்நிலையில் வருகின்ற ஜூலை 20ம் தேதி அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை கோத்தபயா பதவி விலகவில்லை. இன்று இரவுக்குள் பதவி விலகுவார் என்று அவருக்கு நெருங்கியவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கோத்தபய தப்பிச் செல்ல இந்தியா உதவியதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் இதை இலங்கை அரசும், இந்திய அரசும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுபோல் வெளியாகும் வதந்திகளை நம்ம வேண்டாம் என்று இரு நாடுகளும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மால்தீவின் தலைநகரமான மலேவில் காலை 3.07 மணிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பயணித்த ராணுவ விமானம் தரையிறங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவருடன் ராணுவ பாதுகாவலர்களும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“