சபாநாயகர் கரு ஜெயசூர்யா கருத்து : இலங்கையில் ரணில் விக்ரமசிங்கேவினை பதவியில் இருந்து நீக்கிவிட்டு இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவினை பிரதமராக அறிவித்தார் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா. இதற்கு பல்வேறு கட்சியினர் மற்றும் தலைவர்கள் தங்களின் வலுவான எதிர்ப்பினை முன் வைத்தனர்.
மேலும் படிக்க : தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு ?
சபாநாயகர் கரு ஜெயசூர்யா கருத்து
கரு ஜெயசூர்யா, அதிபரை விரைவில் நாடாளுமன்றத்தை கூட்டச் சொல்லி உத்தரவு பிறப்பித்து கடிதம் ஒன்றை எழுதினார். மேலும் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகரின் பேச்சையும் மீறி நாடாளுமன்றத்தை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பினை நிகழ்த்தவில்லை சிறிசேனா.
இந்நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்கவிட்டால் நிச்சயமாக மகிந்த ராஜபக்சேவிற்கு பிரதமர் பதவி கிடையாது என திட்டவட்டமாக கூறியிருக்கிறார் சபாநாயகர்.
ஏற்கனவே நவம்பர் 5 அல்லது 7 தேதியில் நாடாளுமன்றத்தை கூட்டுவோம் என உறுதியளித்திருந்த சிறிசேனா தன்னுடைய வாக்குறுதியை மீறியுள்ளார் என்று கூறியிருக்கிறார். சிறிசேனாவின் இத்தகைய செயல்பாடு அரசியலமைப்பிற்கு மிக்க முரணானது என்று அவர் கருத்து கூறியிருக்கிறார்.