தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் : இலங்கையின் அரசியலில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் தினம் தினம் நடந்தேறி வருகிறது. ராஜபக்சே இந்தியா வருகை, ரணில் விக்ரமசிங்கே இந்தியா வருகை, மைத்ரிபால சிறிசேனாவை கொல்ல முயற்சி என அவ்வபோது இலங்கையின் அரசியல் களம் பரபரப்புடன் செயல்பட்டது. இறுதியில் கடந்த வெள்ளிக் கிழமையன்று இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஜபக்சே. இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க
பெரும்பான்மை நிரூபிக்கப்படாமல் எப்படி ராஜபக்சேவினை பிரதமராக பிரகடனப்படுத்தலாம் என சிறிசேனாவிடம் கேள்வி எழுப்பினார் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
இந்நிலையில் நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ரணில் விக்ரமசிங்கேவினையும் மைத்ரிபால சிறிசேனாவையும் சனிக்கிழமை (27/10/2018) சந்தித்திருக்கிறார்.
ரணிலை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன்
சனிக்கிழமை காலை, ரணிலின் அழைப்பை ஏற்று 11.30 மணியளவில் அலரி மாளிகையில் அந்த சந்திப்பு நடைபெற்றது. ரணில் விக்ரமசிங்கேவிற்கு ஆதரவு அளிப்பதாக இருந்தால் இரண்டு முக்கியமான கோரிக்கைகளுக்கு ஒப்புதழ் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மகிந்த ராஜபக்சேவும் சம்பந்தனுக்கு போன் செய்து தனக்கான ஆதரவினை கேட்ட போது, அவரிடமும் இந்த இரண்டு கோரிக்கைகளையும் முன் வைத்திருக்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்
மைத்ரிபால சிறிசேனாவை சந்தித்த இரா. சம்பந்தன்
ரணில் விக்ரமசிங்கேவை நேரில் சந்தித்து திரும்பிய சம்பந்தன், அதிபர் மாளிகையில் மைத்ரிபால சிறிசேனாவை சந்தித்து பேசினார். இலங்கையில் மக்கள் குழப்பான நிலையை அடைந்திருப்பதிற்கு நீங்களே காரணம் என்றும், உங்களை ஜனாதிபதியாக்கியதிற்கு மக்களுக்கு நீங்கள் ஆற்றிய நன்றிக்கடன் இதுவா என்றும் கேள்வி கேட்டிருக்கிறார் சம்பந்தன்.
நாடாளுமன்றத்திற்கு மதிப்பு அளித்து செயல்படுமாறும், நாட்டு மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் செயல்படுமாறும் மைத்ரிக்கு வேண்டுகோள் விடுதுள்ளார் இரா. சம்பந்தன்
சபாநாயகருக்குக் கடிதம்
மேலும் இவர் அரசியலமைப்பின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் மக்களுக்காக செயல்படும் நாடாளுமன்றத்தின் மாண்பை காக்க வேண்டும் என இலங்கை நாடாளுமன்ற சபா நாயகர் கரு ஜெயசூர்யாவிற்கு நேற்று (28/10/2018) அன்று கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.