'சிரியா புனிதமடைகிறது': ஆஸாத் அரசின் முடிவு குறித்து கிளர்ச்சி படை தலைவர் அபு ஜோலானி உரை

சிரியாவில் தெஹ்ரானின் செல்வாக்கு முடிவுக்கு வந்துவிட்டதை சுட்டிக்காட்டி, ஜோலானி ஈரானைப் பற்றி ஒரு கூர்மையான குறிப்பைக் கொடுத்தார்.

சிரியாவில் தெஹ்ரானின் செல்வாக்கு முடிவுக்கு வந்துவிட்டதை சுட்டிக்காட்டி, ஜோலானி ஈரானைப் பற்றி ஒரு கூர்மையான குறிப்பைக் கொடுத்தார்.

author-image
WebDesk
New Update
Abu Jolani

சிரியாவின் கிளர்ச்சி படை தலைவர் அபு ஜோலானி, டமாஸ்கஸில் உள்ள மசூதி ஒன்றில் வரலாற்று வெற்றியை அறிவித்துள்ளார். அபு முகமது அல்-ஜோலானி தலைமையிலான இஸ்லாமியக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS), மின்னல் வேகத் தாக்குதலில் இரண்டு வாரங்களுக்கும் குறைவான நேரத்தில் தலைநகரை வெற்றிகரமாகக் கைப்பற்றியது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Syria being purified’: Rebel leader Abu Jolani’s speech on victory, survival after Assad’s rule comes to end

அவர் தனது உரையில், "சிரியா புனிதமடைந்து வருகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ஆஸாத் அரசின் போது கேப்டகன் என்ற போதைப்பொருள் அதிகளவு கிடைக்கும் நாடாக சிரியா உருவாகி இருந்ததாக அபு ஜோலானி குறிப்பிட்டுள்ளார்.

"என் சகோதரர்களே, இந்த வெற்றி, முழு இஸ்லாமிய தேசத்திற்கும் கிடைத்த வெற்றி" என்று ஜோலானி அறிவித்தார். தனித்துவமான உமையாத் மசூதியில் வைத்து அல் ஜோலானி தனது உரையை நிகழ்த்தினார். 

Advertisment
Advertisements

மேலும், “இந்த வெற்றி, எல்லாம் வல்ல இறைவனின் அருளால், தியாகிகள், விதவைகள், அனாதைகள் ஆகியோரின் தியாகத்தால் கிடைத்த வெற்றி. சிறைவாசத்தை அனுபவித்தவர்களின் துன்பத்தின் மூலம் இது வந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

ஜோலானி: அல்-கொய்தா வீரரில் இருந்து கிளர்ச்சி படை தலைவர்

டமாஸ்கஸுக்கு அபு முகமது அல்-ஜோலானியின் பயணம் நீண்ட மற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் ஒரு இளம் அல்-கொய்தா வீரராக தொடங்கிய பயணம், கிளர்ச்சி படை தலைவராக மாறியுள்ளது. 

அவரது பரிணாம வளர்ச்சியானது, அவருடைய அதிகாரத்திற்கான பாதை மற்றும் அவர் வழங்க விரும்பும் செய்தி ஆகிய இரண்டையும் தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியது. அது மட்டுமல்லாமல், தனது அதிகாரத்தை குறைத்து மதிப்பிட்டவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவரது வளர்ச்சி அமைந்துள்ளது.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தில் தனது உரையை, சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த உமையாத் மசூதியில் ஜோலானி வழங்கியுள்ளார். மாறாக அவர் தனது உரையை தொலைக்காட்சி ஸ்டூடியோவிலோ அல்லது அதிபர் மாளிகையில் வைத்தோ உரையாற்றவில்லை. 


மேற்கு நோக்கி ஜோலானியின் தெளிவான சமிக்ஞை: 

சிரியாவில் தெஹ்ரானின் செல்வாக்கு முடிவுக்கு வந்துவிட்டதை சுட்டிக்காட்டி, ஜோலானி ஈரானைப் பற்றி ஒரு கூர்மையான குறிப்பைக் கொடுத்தார். அவரது வார்த்தைகள் ஈரானின் பங்கைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டதாகத் தோன்றியது. லெபனானில் ஹெஸ்பொல்லாவுக்கான அதன் அணுகல் துண்டிக்கப்படுவதையும் சிரியாவில் அதன் கோட்டையை இழப்பதையும் எடுத்துக்காட்டுகிறது. இது தெஹ்ரானில் மட்டுமல்ல, டெல் அவிவ் மற்றும் வாஷிங்டனிலும் கேட்கப்படும் ஒரு செய்தியாகும். அங்கு ஜோலானி இன்னும்  பயங்கரவாதியாகக் கருதப்படுகிறார். அவருடைய தலைக்கு 10 மில்லியன் டாலர் பரிசாக உள்ளது.

அமெரிக்கா உட்பட சர்வதேச சக்திகளுடன் நேரடியாகப் பேசுவதன் மூலம், ஜோலானி புவிசார் அரசியல் நிலப்பரப்பையும், தனது ஆட்சியை ஆதரிக்கும் அல்லது எதிர்க்கக்கூடிய முக்கிய நபர்களையும் புரிந்துகொண்டதாகக் காட்டினார். அஸாத்திற்கு எதிரான தாக்குதலுக்கு முன்னதாக ஒரு நேர்காணலுக்காக அமெரிக்க செய்தி நிறுவனமான CNN அவரை தொடர்பு கொண்டது. நேர்காணலின் போது, ​​ஜோலானி தான் மற்ற ஜிஹாதி பிரிவுகளில் இருந்து விலகி, அவர்களின் மிருகத்தனமான தந்திரங்களில் இருந்து பிரிந்துவிட்டதாக கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜோலானியின் அறிக்கைகளை ஒப்புக் கொள்வதாக கூறியிருந்தார். எனினும், கிளர்ச்சி படை தலைவரின் வார்த்தைகளை விட அவரது செயல்கள் தான் இறுதியில் அவரது எதிர்காலத்தை வரையறுக்கும் என்றும் பைடன் தெரிவிதிருந்தார்.

ஜோலானியின் உரை பிராந்திய சக்திகளுக்கு உறுதியளிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. குறிப்பாக, போதைப் பொருள் நாடு என உருவான பெயரை ஒழுங்குபடுத்தி, சிரியாவின் நற்பெயரை மீட்டெடுக்கும் வகையில் அவரது வார்த்தைகள் இருந்தது.

எனினும், அவரது வார்த்தைகளை விட, செயல்களே அனைத்தையும் தீர்மானிக்கிறது எனக் கருதப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Syria Attack

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: