கொரோனா தொற்று இங்கிலாந்தில் உச்சத்தில் இருந்த நேரத்தில் பலரும் பொது ஊரடங்கினையும், சமூக இடைவெளியையும் பின்பற்றாமல் தங்களின் விருப்பம் போல் நடந்து கொண்டனர். அப்போது கர்ப்பவதியாக இருந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவருடைய நுரையீரல்கள் முழுவதும் திரவத்தால் நிரம்பியிருந்தது.
அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. அப்போது பேசிய அவர், அனைவரும் இங்கிலாந்து பிரதமர் போரீஸின் பேச்சை கேட்டு நடந்து கொள்ளுங்கள். எதையும் பொருட்படுத்தாமல் இஷ்டம் போல் ”பார்ட்டி” செய்வது பெரும் இன்னல்களை தான் விளைவிக்கும் என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்திருந்தார்.
மேலும் படிக்க :‘சென்னைல இருந்து வர்ற யாருக்கும் உதவ கூடாதுங்க’ – வைரலாகும் தண்டோரா!
அந்த வீடியோ நம் அனைவருக்கும் ஞாபகத்தில் இருக்கும். கேரன் என்ற அந்த பெண்ணுக்கு அழகான ஆண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது. சிசேரியன் மூலம் பிறந்த அவருடைய மகனுக்கு டைசன் என்று பெயர் வைத்துள்ளார். காரணம் என்னவென்று கேட்டால் கொரோனாவை எதிர்த்து நாங்கள் இருவரும் போராடினோம்.
அதனால் தான் டைசனின் பெயரை அவனுக்கு வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸை எதிர்க்கும் ஆண்ட்டிபாடிகள் அவருடைய உடம்பிற்குள் இருப்பதாக அறிவிக்கும் அவர் தன்னுடைய மகனுக்கும் ஆண்ட்டிபாடிகள் உற்பத்தியாகியிருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil