மலேசியா நாட்டில் உள்ள கோலாலம்பூரில் மாரியம்மன் கோவிலை இடம் மாற்றம் செய்யும் முயற்சியில் கலவரம் உருவானது. கலவரத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியா நாட்டின் செலங்கோர் மாநிலத்தில் உள்ள சுபாங் ஜெயா பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமஹா மாரியம்மன் கோவில் உள்ளது. அதே கோவில் உள்ள பகுதியை ஆக்கிரமிக்க தனியார் கட்டிட நிறுவனம் ஒன்று முடிவெடுத்தது.
இதனால் இந்தக் கோவிலை வேறு இடத்துக்கு மாற்றுமாறும் அதற்கான இழப்பீட்டு தொகை அளிக்க தயாராக உள்ளதாகவும் அந்த பிரபல தனியார் நிறுவனம் ஒன்று வலியுறுத்தியது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை ஸ்ரீமஹா முத்து மாரியம்மன் கோவில் பக்தர்கள் வழிபாடு செய்துகொண்டிருந்தபோது பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் கோவிலுக்கு வந்து, கோவிலின் உள்ளே இருந்த பக்தர்களை வெளியே செல்லும்படி மிரட்டினார்கள்.
கோவிலின் உள்ளே இருந்த சில பக்தர்கள் மீதும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் பக்தர்கள் சிலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டதில் இந்த தாக்குதலை கட்டுமான நிறுவனம்தான் செய்துள்ளது என்று பாதிக்கப்பட்டவர்கள் புகாரில் தெரிவித்தனர். சட்டரீதியாக வழக்கை எதிர்கொள்ள தைரியமின்றி அந்த நிறுவனத்தினர் கூலிப்படையை ஏவி பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் புகாரில் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த தாக்குதலுக்கு காரணமாக என்று கூறப்படும் அந்த தனியார் கட்டுமான நிறுவனம் மீது சில தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு உருவானது.
இந்நிலையில், தனியார் நிறுவனம் மீதான தாக்குதல் தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செலாங்கோர் நகர போலீஸ் தெரிவித்துள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த அப்பகுதியில் சுமார் 700 போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Riot over relocation of hindu temple in malaysia
தடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்
ஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க!
பள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு
பட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி