இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் ஆகிறார் ரிஷி சுனக்
இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் தேர்வாக உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டின் பிரதமராகும் முதல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ரிஷி சுனக் ஆவார். முன்னதாக இங்கிலாந்தின் பிரதமர் ஆன லிஸ் ட்ரஸ் 44 நாள்களில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
ரிஷி சுனக் வெஸ்ட்மின்ஸ்ட்ரில் உள்ள பணக்கார அரசியல்வாதி ஆவார். இங்கிலாந்தின் அதிகாரப்பூர்வ நாணயமான பவுண்ட் சிக்கலில் உள்ளது.
இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ரிஷி சுனக் பிரதமராக தேர்வாகியுள்ளார். 42 வயதான முன்னாள் நிதியமைச்சரான ரிஷி சுனக், கடந்த 3 மாதங்களில் இங்கிலாந்து காணும் 3ஆவது பிரதமர் ஆவார்.
ரிஷி சுனக்கின் குடும்பம் 1960களில் இங்கிலாந்தில் குடியேறி உள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, அவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார், அங்கு அவர் தனது மனைவி அக்ஷதா மூர்த்தியைச் சந்தித்தார்,
அவருடைய தந்தை இந்திய பில்லியனர் என்.ஆர். நாராயண மூர்த்தி, அவுட்சோர்சிங் நிறுவனமான இன்ஃபோசிஸ் லிமிடெட் நிறுவனர் ஆவார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil