Hamas launches surprise attack on Israel: இஸ்ரேல் நாட்டின் முக்கிய விடுமுறை நாளான ஷபாத் மற்றும் சிம்சாத் தோராவின் விடுமுறை தினத்தன்று பல்வேறு வழிகளில் பல இடங்களில் ஹமாஸ் பயங்கரவாதிகள் காசா பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவினர்.
இந்தத் தாக்குதல் நடந்து 6 மணி நேரம் கடந்த பின்னரும் ஹமாஸ் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்திவருகின்றனர். இஸ்ரேல் ராணுவ வாகனங்கள் உடைக்கப்பட்டன.
பல்வேறு இடங்களில் பாலஸ்தீன கொடிகள் தென்பட்டன. இந்தத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.
இதற்கிடையில் இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குலில் 198 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 1510 பேர் காயமுற்றுள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Rocket barrage from Gaza as Hamas launches surprise attack on Israel
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“