/tamil-ie/media/media_files/uploads/2018/08/rohingya-children-759.jpg)
இன அழிப்பு தினம் அனுசரிப்பு
இன அழிப்பு தினம் : நம் கண் முன்னே அரங்கேறும் ஒவ்வொரு போர்களுக்கும் நாம் சாட்சியங்களாக இருக்கிறோம். இன அழிப்பு என்ற வார்த்தைகளை நாம் திரும்பத் திரும்ப கேட்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.
ஏதோ ஒரு தேசத்தில் இருந்து பல்வேறு தேசங்களுக்கு அதிகளாய் பிரிந்து சென்று காணி நிலம் கூட சொந்தமற்றுப் போகும் நிலைக்கு தள்ளப்படும் மக்களின் வாழ்வு எப்படி இருக்கும் என்ற படிப்பினையை மீண்டும் ஒரு முறை எடுத்து கூறுகிறார்கள் மியான்மர் நாட்டினைச் சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள்.
இன அழிப்பு தினம் - கருப்பு நாளை கடைபிடிக்கும் அகதிகள்
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 25ம் நாள் மியான்மரில் இருக்கும் ரக்கைன் மாகாணத்தில் ராணுவ தாக்குதல்கள் நடத்தியது மியான்மர் அரசு. அதனைத் தொடர்ந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா இனத்தவர்கள் மியான்மரில் இருந்து தரை மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் அருகில் இருக்கும் நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறினார்கள்.
ஐக்கிய நாடுகளின் சபை அந்த நிகழ்வினை இன அழிப்பு நடவடிக்கையாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இந்த வருடம் இந்நாளை கருப்பு தினமாக துக்கம் அனுசரிக்க விரும்பியுள்ளனர் ரோஹிங்கியா இன மக்கள்.
வங்க தேசத்தில் இருக்கும் காக்ஸ் பஜார் பகுதியில் இருக்கும் அகதி முகாம்களில் இருக்கும் இந்த அகதிகள் தங்களின் பிரார்த்தனைகள் மூலமாகவும் உரையாடல்களின் வழியாகவும் தங்களின் வருத்தத்தை பதிவு செய்துள்ளனர்.
To read this article in English
காக்ஸ் பஜார் உலகத்திலேயே இருக்கும் மிகப் பெரிய அகதி முகாம்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த வருடத்தை விட இவ்வருடம் நிறைய பேர் அகதி முகாம்களில் தஞ்சம் அடைய வாய்ப்புகள் இருப்பதாக ஒரு கருத்து நிலவிவருகிறது.
மியான்மர் நாட்டு அரசுடனும், வங்கதேச அரசுடனும் தொடர்ந்து பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது ஐக்கிய நாடுகளின் சபை. சிலருக்கு மியான்மர் திரும்பி செல்ல விருப்பம் இருப்பினும், ரோஹிங்கியா மக்களுக்கு பாதுகாப்பான இடமாக மியான்மர் தற்போது இல்லை என்று கருதுகிறது ஐக்கிய நாடுகள் சபை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.