1996 ல் அரண்மனைக்கு வந்த சுற்றுலாபயணி.. 2018 ல் நாட்டுக்கே இளவரசி!!!

லண்டன் இளவரசர் ஹாரியை மணந்து, நாட்டுக்கே இளவரசியான  மேகன் மார்கில்லின் 1996ல் தனது  தோழியுடன் அரண்மனை வாசலில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இளைய மகன் இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்க டெலிவிஷன் நடிகை மேகன் மார்கிலுக்கும் கடந்த சனிக்கிழமை (19. 5.18) லண்டன் கோட்டையில் பிரம்மாண்டமாக   திருமணம் நடைபெற்றது. ஹாரியும் மேகனும் பல வருடங்களாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதல் விவகாரம் குறித்து  ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. அதன் பின்பு, ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் இவர்களின் திருமணத்திற்கு பச்சை கொடி காட்டினார். இதையடுத்து அவர்களது திருமணம் நிச்சயமானது. அதன் பின்பு  இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 15 ஆம்  நூற்றாண்டில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இவர்களது திருமணம் நடைப்பெற்றது.

இளவரசர் ஹாரி –   மேகன் மார்கில்லின்  ஜோடியை கண்டு  கண்ணு வைக்காத  லண்டன் மக்களே இருக்கமாட்டார்கள். காதல் மழையில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட தருணங்கள்,   முத்த மழை போன்ற புகைப்படங்கள் லண்டனை தாண்டிய இந்திய ஊடகங்களிலும் அதிகளவில் பேசப்பட்டன.

இந்நிலையில்   மேகன் மார்க்கிலின்  1996 ஆம் ஆண்டு எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.  தனது 16 ஆவது வயதில் மேகன்  தனது  தோழியுடன் லண்டன் அரண்மனையை சுற்றி பார்க்க வந்துள்ளார். அப்போது அரண்மனை வாசலுக்கு முன்பு நின்றுக் கொண்டு  சுற்றுலாவாசியாக புகைப்படம் எடுத்துள்ளார்.

சரியாக 22 வருடங்கள் கழித்து இப்போது அதே அரண்மனைக்கு இளவரசியாக மாறியுள்ளார்.  மேகன் அந்த புகைப்படத்தை எடுக்கும் போது சற்றும் எதிர்ப்பார்த்து இருக்க மாட்டார்.  ஒரு நாள் இந்த அரண்மனைக்கு இளவரசி ஆவோம் என்று. ஆனால்  2018 ல் காதல் கணவர் ஹாரியை மணந்து நிஜத்தில்  இளவரசி ஆகியுள்ளார்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close