ஹாரியின் திருமணத்தை பார்த்து கடுப்பான முன்னாள் காதலி!!!

லண்டன்  இளவரசர்  ஹாரியின்  திருமணத்தை பார்க்க அவரின் முன்னாள் காதலில் நேரில் வந்திருந்தார். அப்போது அவர் கொடுத்த எக்ஸ்பிரஷன்களை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர். கதைகளில் கேட்டிருப்போம்.. இளவரசருக்கு பிரம்மாண்டமாக கல்யாணம் நடக்கும். அதை நாட்டு மக்களே  கொண்டாடுவார்கள்.  ராணி தேவதை போல் வந்திருங்குவார் என்றெல்லாம். அதை  21…

By: Updated: May 22, 2018, 11:38:59 AM

லண்டன்  இளவரசர்  ஹாரியின்  திருமணத்தை பார்க்க அவரின் முன்னாள் காதலில் நேரில் வந்திருந்தார். அப்போது அவர் கொடுத்த எக்ஸ்பிரஷன்களை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

கதைகளில் கேட்டிருப்போம்.. இளவரசருக்கு பிரம்மாண்டமாக கல்யாணம் நடக்கும். அதை நாட்டு மக்களே  கொண்டாடுவார்கள்.  ராணி தேவதை போல் வந்திருங்குவார் என்றெல்லாம். அதை  21 ஆம் நூற்றாண்டில் நேரிலியே காட்டியது இளவரசர் ஹாரியின் திருமணம்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இளைய மகன் இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்க டெலிவிஷன் நடிகை மேகன் மார்கிலுக்கும் கடந்த சனிக்கிழமை (19. 5.18) லண்டன் கோட்டையில் பிரம்மாண்டமாக   திருமணம் நடைபெற்றது. ஹாரியும் மேகனும் பல வருடங்களாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதல் விவகாரம் குறித்து  ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. அதன் பின்பு, ராணி இரண்டாம் எலிசபெத்   இவர்களின் திருமணத்திற்கு பச்சை கொடி காட்டினார். இதையடுத்து அவர்களது திருமணம் நிச்சயமானது. அதன் பின்பு  இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 15 ஆம்  நூற்றாண்டில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இவர்களது திருமணம் நடைப்பெற்றது.

இளவரசர் ஹாரி –   மேகன் மார்கில்லின்  ஜோடியை கண்டு  கண்ணு வைக்காத  லண்டன் மக்களே இருக்கமாட்டார்கள். காதல் மழையில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட தருணங்கள்,   முத்த மழை போன்ற புகைப்படங்கள் லண்டனை தாண்டிய இந்திய ஊடகங்களிலும் அதிகளவில் பேசப்பட்டன. திருமணத்திற்கு வந்த குறிப்பிட்ட ஒரு பெண்ணின் புகைப்படமும் வைரலானது.

அந்த பெண் யார் என்று  உற்று நோக்க ஆரம்பித்த்க பிறகு தான் தெரிந்தது, அவர் இளவரசியின் முன்னாள் காதலி ஆவர்.  இவரின் பெயர் செல்சி தவி.  இவரும் இளவரசர் ஹாரியும்,  2005 ஆம் ஆண்டு முதல் 2015   வரை காதலித்து வந்துள்ளனர். அதன் பின்பு, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

இந்த செய்திகள்,  லண்டன் ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக வெளியாகியது. இந்நிலையில் தான் ஹாரி, நடிகை மேகன் மார்கிலை காதலிப்பதாக கூறினார்.  இறுதியாக இந்த ஜோடியின் காதல் தான் திருமணத்தில் முடிந்தது.

https://twitter.com/ThePettyBish/status/997823998112272384

இந்த திருமணத்திற்கு ஹாரி, முன்னாள் காதலி  செல்சி தவியை நேரில் அழைத்திருந்தார். அழைப்பை ஏற்று  அவரும் கோட்டைக்கு நேரில் வந்திருந்தார். ஆனால் ஹாரி மற்றும் மேகன் மார்க்கில் மோதிரம் மாற்றும் போது செல்சி தவி தன்னையே அறியாமல் கொடுத்த எக்ஸ்பிரஷன்கள்  லைவ்வில் ஒளிப்பரப்பாகியது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள்  சமூகவலைத்தளங்களில் பயங்கரமாக கலாய்த்து தள்ளினர்.

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Royal wedding 2018 prince harrys ex girlfriends expression takes twitterati on a laughter ride

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X