ரஷ்ய அதிபர் புதின் கடந்த 22 ஆண்டுகளாக முழு நாட்டையும் தனது கைபிடியில் வைத்திருந்தாலும், சுதந்திர தகவல் பரிமாற்றம், அரசியல் வெளிப்பாடு சிறிதளவாக ஆன்லைனில் இருந்து வந்தது. தற்போது, அவையும் முடிவுக்கு வந்துள்ளது.
உக்ரைன மீது போர் தொடங்கியதையடுத்து, உலக நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கு இடையே டிஜிட்டல் தடுப்பு சுவர் உருவாகியுள்ளது. ரஷ்ய அதிகாரிகளும், பன்னாட்டு இணைய நிறுவனங்களும் அதிவேகத்தில் சுவரை எழுப்பியுள்ளன.
டிக்டாக், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனங்கள் ரஷ்யாவில் தனது சேவையை நிறுத்தியுள்ளது. பேஸ்புக், டிவிட்டர் செயலிக்கு ரஷ்யாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. யூடியூப் எந்த நேரம் வேண்டுமானாலும் தடை செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளது.
ஆப்பிள், சாம்சங், மைக்ரோசாப்ட், ஆரக்கிள், சிஸ்கோ மற்றும் பிற நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து வெளியேறியுள்ளன. . Minecraft போன்ற ஆன்லைன் வீடியோ கேம்கள் கூட இனி அங்கு உபயோகிக்க இயலாது.
இந்த நடவடிக்கைகள் ரஷ்யாவை சீனா, ஈரானை போல் டிஜிட்டல் பிரிவில் வெளியுலகத்திலிருந்து தடுத்து வைத்துள்ளது. இணையத்தில் கட்டுப்பாடை அதிகரிப்பது மட்டுமின்றி வெளிநாட்டு வலைத்தளங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை தணிக்கை செய்கிறது.
சீனாவின் இணையமும் மேற்கத்திய இணையமும் பல ஆண்டுகளாக முற்றிலும் தனித்தனியாக மாறியுள்ளன. சில சேவைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. ஈரானில், போராட்டங்களின் போது அதிகாரிகள் இணையத்தை முடக்கியுள்ளன.
இணையம் மட்டுமின்றி உலகின் நிதி அமைப்பிலிருந்து ரஷ்யா பெருமளவில் துண்டிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு விமான நிறுவனங்கள் ரஷ்ய வான்வெளியில் பறக்கவில்லை. அதன் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்களுக்கான உலகளாவிய அணுகல் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
அதேசமயம், டிஜிட்டல் தனிமைப்படுத்தல் புதினின் நலன்களுக்கும் உதவுகிறது. அரசாங்கத்தின் வழியைப் பின்பற்றாத கருத்து வேறுபாடுகள், தகவல்கள் பரவுவதை கட்டுப்படுத்த அவரை அனுமதிக்கிறது.
கடந்த வாரம் இயற்றப்பட்ட தணிக்கைச் சட்டத்தின் கீழ், உக்ரைன் மீதான போர் குறித்து “தவறான தகவல்களை” வெளியிட்டதற்காக பத்திரிகையாளர்கள், இணையதளம் நடத்துபவர்கள் மற்றும் பிறருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை, மீண்டும் உலகை 1980களுக்கு திரும்பிய உணர்வை தந்ததாக இணைய தணிக்கையை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்தது. ஏனெனில், அப்போது தான் மொத்த தகவல் பரிமாற்றமும் அரசு கையில் இருந்தது.
புதின் முதலில் அரசாங்க விமர்சகர்கள் மற்றும் ஆன்லைனில் சுதந்திரமான செய்தி நிறுவனங்களை ஒடுக்கினார். ட்விட்டர் போன்ற வலைத்தளங்களுக்கான அணுகலைத் தடுக்க புதிய தணிக்கை கருவிகளை நிறுவுவதற்கான பிரச்சாரத்தை ரஷ்யா தொடங்கியது.
ரஷ்ய கட்டுப்பாட்டாளர்களால் தடுக்கப்படும் அடுத்த இலக்குகளில் ஒன்றாக YouTube இருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
உள்நாட்டு இணைய நிறுவனங்கள் மூலம் பல ஆண்டுகளாக தனி சாம்ராஜியத்தை உருவாக்கி வைத்திருக்கும் சீனாவை போல் ரஷ்ய கிடையாது. ரஷ்யாவில் பெரியளவில் உள்நாட்டு இணையம் அல்லது தொழில்நுட்பத் துறை இல்லை. எனவே, டிஜிட்டல் சுற்றுசூழலில் ரஷ்யா தனியாகவிடப்பட்டால், மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்க நேரிடலாம்.
இதுதவிர, இணையம் மற்றும் தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளின் எதிர்கால நம்பகத்தன்மை, வணிகங்கள் மற்றும் அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் சாப்ட்வேருக்கான சேவைகள் ஆகியவை ஆபத்தில் உள்ளன.
ஏற்கனவே, மொபைல் போன் நெட்வொர்க்குகளை இயக்கும் ரஷ்ய தொலைத்தொடர்பு நிறுவனங்களால், Nokia, Ericsson மற்றும் Cisco போன்ற நிறுவனங்களின் புதிய உபகரணங்கள் மற்றும் சேவைகளை அணுகுவதற்கான அனுமதி இல்லை.
இவ்விவகாரத்தை கையாள திருட்டு சாப்ட்வேர்களை பதிவிறக்குவது சட்டவிரோதமானது என்ற விதியை தளர்த்துவதன் மூலம் ரஷ்ய அதிகாரிகள் பதிலளிக்கலாம் என்கின்றனர்.
உக்ரைன் அரசாங்கமும் ரஷ்யாவில் இணை அணுகலைத் துண்டிக்க சேவை வழங்குநர்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. உக்ரைன் அதிகாரிகள், இணைய டொமைன்களை மேற்பார்வையிடும் லாப நோக்கற்ற குழுவான ICANNயிடம், ரஷ்ய இணைய டொமைன் “.ru” ஐ இடைநிறுத்துமாறு கோரியது. ஆனால், உக்ரைன் கோரிக்கையை நிராகரித்தது.
சில ரஷ்ய இணைய பயனர்கள் கடுமையான கட்டுப்பாடுகளைச் மீறுவதற்கான வழிகளைக் கண்டறிகின்றனர். தொழில்நுட்பத்தின் பயன்பாட்டைக் கண்காணிக்கும் சேவையான Top10VPN கூற்றுபடி, விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்குகள் மூலம் இருப்பிடத்தை மறைத்து பிளாக் செய்யப்பட்ட இணையதளங்களை அணுக அனுமதிக்கும் தொழில்நுட்பத்தின் அணுகல் படையெடுப்புக்குப் பிறகு 600% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆனால் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை தண்டிக்க பன்னாட்டு நிறுவனங்களின் முடிவுகள் இந்த விபிஎன் கருவிகள் உபயோகிப்பதையும் கடினமாக்கும். விபிஎன் உபயோகிக்க பணம் செலுத்த வேண்டிய வழியான விசா மற்றும் மாஸ்டர்கார்ட் பிளாக் செய்யப்பட்டது, ரஷ்யர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil