டிரம்பின் வர்த்தக மிரட்டல் சட்டவிரோதம்; வர்த்தக கூட்டாளிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இந்தியாவுக்கு உண்டு - ரஷ்யா

டிரம்ப் இந்தியாவின் இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக அறிவித்ததற்கு பதிலளித்த ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை, இதுபோன்ற அச்சுறுத்தல்களை ரஷ்யா சட்டப்பூர்வமானதாக கருதவில்லை என தெரிவித்துள்ளது.

டிரம்ப் இந்தியாவின் இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக அறிவித்ததற்கு பதிலளித்த ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை, இதுபோன்ற அச்சுறுத்தல்களை ரஷ்யா சட்டப்பூர்வமானதாக கருதவில்லை என தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Putin Modi

“பல அறிக்கைகள், உண்மையில் அச்சுறுத்தல்களாகவும், ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளைத் துண்டிக்குமாறு நாடுகளை கட்டாயப்படுத்துவதற்கான முயற்சிகளாகவும் நாங்கள் கருதுகிறோம். இத்தகைய அறிக்கைகள் சட்டபூர்வமானவை என்று நாங்கள் கருதவில்லை” என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் இந்தியாவின் இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக அறிவித்ததற்கு பதிலளித்த ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை, இதுபோன்ற அச்சுறுத்தல்களை ரஷ்யா சட்டப்பூர்வமானதாக கருதவில்லை என தெரிவித்துள்ளது. “பல அறிக்கைகள், உண்மையில் அச்சுறுத்தல்களாகவும், ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளைத் துண்டிக்குமாறு நாடுகளை கட்டாயப்படுத்துவதற்கான முயற்சிகளாகவும் நாங்கள் கருதுகிறோம். இத்தகைய அறிக்கைகள் சட்டபூர்வமானவை என்று நாங்கள் கருதவில்லை” என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

இந்தியாவின் தொடர்ச்சியான ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளை எதிர்த்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் வெளியிட்ட கருத்துக்களுக்கு ரஷ்யா கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. இந்த அழுத்தம் கொடுக்கும் தந்திரங்களை ‘சட்டவிரோதமானது’ என ரஷ்யா கூறியுள்ளது.

இந்தியாவின் இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்ததற்கு பதிலளித்த பெஸ்கோவ், “பல அறிக்கைகள், உண்மையில் அச்சுறுத்தல்களாகவும், ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளைத் துண்டிக்குமாறு நாடுகளை கட்டாயப்படுத்துவதற்கான முயற்சிகளாகவும் நாங்கள் கருதுகிறோம். இத்தகைய அறிக்கைகள் சட்டபூர்வமானவை என்று நாங்கள் கருதவில்லை” என தெரிவித்தார்.

Advertisment
Advertisements

டிரம்பின் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்த பெஸ்கோவ், “சர்வ தேச நாடுகள் தங்கள் சொந்த வர்த்தக கூட்டாளிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு. வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான பங்காளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், அந்த நாட்டிற்கு சாதகமான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வடிவங்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

இந்த கருத்துக்கள், ஜூலை 31-ம் தேதி ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் பதிவிட்ட சில நாட்களுக்குப் பிறகு வெளியாகியுள்ளது. அதில், "முரட்டுத்தனமான" வர்த்தகத் தடைகள் என இந்தியா மீது குற்றம் சாட்டி, கடுமையான வரிகளை விதிப்பதாக அவர் சபதம் செய்திருந்தார். ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கியதற்காக குறிப்பிடப்படாத "தண்டனை" ஒன்றையும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.

டிரம்பின் அச்சுறுத்தல்கள் “நியாயமற்றவை” என்றும், அதன் பொருளாதார நலன்களைப் பாதுகாக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது இரு முக்கிய பொருளாதாரங்களுக்கு இடையேயான வர்த்தகப் பிளவை மேலும் ஆழப்படுத்தியுள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தின் கருத்துப்படி, ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதிகள் இந்திய நுகர்வோருக்கு கணிக்கக்கூடிய மற்றும் மலிவு விலையில் எரிசக்தி செலவுகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

“உக்ரைன் மோதல் தொடங்கிய பிறகு, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் இந்தியா குறிவைக்கப்பட்டுள்ளது. உண்மையில், மோதல் வெடித்த பிறகு பாரம்பரிய எண்ணெய் விநியோகங்கள் ஐரோப்பாவிற்கு திருப்பி விடப்பட்டதால், இந்தியா ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யத் தொடங்கியது. அந்த நேரத்தில், உலகளாவிய எரிசக்தி சந்தை ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த இந்தியா அத்தகைய இறக்குமதியை தீவிரமாக ஊக்குவித்தது” என அது மேலும் தெரிவித்துள்ளது.

Russia

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: