Russia launches ‘more than 100 missiles’ in Ukrainian cities Tamil News - உக்ரைன் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்: முக்கிய நகரங்களை உலுக்கிய 100 ஏவுகணைகள் | Indian Express Tamil

உக்ரைன் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்: முக்கிய நகரங்களை உலுக்கிய 100 ஏவுகணைகள்

ரஷ்யா 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியாதல் உக்ரைன் முழுவதும் வான்வழி தாக்குதல் சைரன்கள் ஒலித்தன என்று உக்ரேனிய அதிபரின் ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Russia launches ‘more than 100 missiles’ in Ukrainian cities Tamil News
missiles

 Russia – Ukraine war Tamil News: ரஷ்யா அதன் அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24 முதல் படையெடுத்து போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பா மற்றும் நேட்டோ உதவி வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைனை இராணுவமயமாக்குவதற்கான “சிறப்பு இராணுவ நடவடிக்கை” எடுத்து வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை ரஷ்யா 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை தலைநகர் கீவ் உள்பட பல நகரங்களின் மீது ஏவியாதல் உக்ரைன் முழுவதும் வான்வழி தாக்குதல் சைரன்கள் ஒலித்தன என்று உக்ரேனிய அதிபரின் ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“ஒரு சீறிய விமானத் தாக்குதல். பல அலைகளில் 100 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், ”என்று உக்ரைன் அதிபரின் அலுவலக ஆலோசகர் ஒலெக்ஸி அரெஸ்டோவிச் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். மேலும் உக்ரைனின் மைகோலேவ் பிராந்தியத்தின் தலைவரும் ரஷ்ய ஏவுகணைகளை பார்த்தாக பதிவு செய்துள்ளார்.

ராய்ட்டர்ஸ் செய்தியாளர் மற்றும் உள்ளூர் ஊடக அறிக்கையின்படி, கியேவ், சைட்டோமிர் மற்றும் ஒடேசாவில் ஏவுகணைகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி உள்கட்டமைப்பிற்கு சாத்தியமான சேதத்தை குறைக்கும் நோக்கில், ஒடெசா மற்றும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டது. உக்ரேனிய அமைதித் திட்டத்தை கிரெம்ளின் நிராகரித்ததை அடுத்து, ரஷ்யாவின் நான்கு பிராந்தியங்களை இணைப்பதை கியேவ் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

மாஸ்கோ பொதுமக்களை குறிவைப்பதை பலமுறை மறுத்துள்ளது. ஆனால் உக்ரைன் தனது தினசரி குண்டுவீச்சு சிறு நகரங்கள், நகரங்கள் மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பை அதிகாரத்திலிருந்து மருத்துவம் வரை அழித்து வருவதாகக் கூறுகிறது.

நேற்று புதன் கிழமையன்று, ரஷ்ய ஷெல் தாக்குதல்கள் கெர்சன் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவைத் தாக்கின. ஆனால் யாரும் காயமடையவில்லை என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி-இன் துணைத் தலைவர் கைரிலோ திமோஷென்கோ தெரிவித்துள்ளார். ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் தங்குமிடத்திற்கு மாற்றப்பட்டனர் என்று அவர் கூறியுள்ளார்.

“இது பயமாக இருந்தது … வெடிப்புகள் திடீரென்று தொடங்கியது, ஜன்னல் கைப்பிடி கிழிக்க தொடங்கியது. என் கைகள் இன்னும் நடுங்குகின்றன. நாங்கள் அடித்தளத்திற்கு வந்தபோது, ​​​​எறிகணைத் தாக்குதல் முடிவடையவில்லை. ஒரு நிமிடம் கூட இல்லை.” ஓல்ஹா பிரைசிட்கோ என்ற புதிய தாய் ஒருவர் கூறியுள்ளார்.

உக்ரைனின் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட தெற்கு நகரமான கெர்சன் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து குண்டுவீச்சுக்கு உட்பட்டுள்ளன. அவை கடந்த மாதம் உக்ரைனுக்கு ஒரு பெரிய வெற்றியில் நகரம் திரும்பப் பெற்றபோது ஆற்றின் கிழக்குக் கரையில் பின்வாங்கின.

அதிபர் ஜெலென்ஸ்கி வெளியிட்ட சமீபத்திய வீடியோவில், உக்ரேனியர்கள் தங்களது அன்பானவர்களைக் கட்டிப்பிடிக்கவும், அவர்கள் பாராட்டுவதை நண்பர்களிடம் சொல்லவும், சக ஊழியர்களை ஆதரிக்கவும், பெற்றோருக்கு நன்றி தெரிவிக்கவும், குழந்தைகளுடன் அடிக்கடி மகிழ்ச்சியடையவும் வலியுறுத்தினார்.

“பயங்கரமான மாதங்களை நாங்கள் சகித்திருந்தாலும், நாங்கள் எங்கள் மனிதாபிமானத்தை இழக்கவில்லை. ஒரு கடினமான ஆண்டு முன்னால் இருந்தாலும் நாங்கள் அதை இழக்க மாட்டோம்.”என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: Russia launches more than 100 missiles in ukrainian cities tamil news