திவ்யா ஏ - Divya A
ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வருகை தர உள்ளார். இந்த ஆண்டு ஜூலை மாதம் மாஸ்கோவில் இரு தலைவர்களும் உச்சிமாநாடு அளவிலான பேச்சுவார்த்தை நடத்தியபோது, பிரதமர் நரேந்திர மோடி, புதினுக்கு இந்தியா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இதனிடையே, அக்டோபர் மாதம் கசானில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டிற்காக மோடி ரஷ்யா சென்றிருந்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Finalising dates for Putin visit to India: Kremlin
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வர உள்ளதாகவும், அவரது பயணத்திற்கான தேதிகள் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிமிட்ரி பெஸ்கோவ் பேசுகையில், "இந்த ஆண்டில் நாங்கள் இரண்டு முறை பிரதமர் மோடியை வரவேற்றோம், விரைவில் அதிபர் புதினின் இந்தியா வருகைக்கான தேதியை நாங்கள் கண்டுபிடிப்போம் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்தியாவும் ரஷ்யாவும் நல்ல உறவைக் கொண்டுள்ளன, எங்கள் இருதரப்பு உறவின் சிறப்புத் தன்மை பற்றிய பகிரப்பட்ட பார்வையை நாங்கள் கொண்டுள்ளோம். வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அளவு (இரு நாடுகளுக்கு இடையே) உண்மையில் வளர்ந்து வருகிறது.
2022 ஆம் ஆண்டில், வர்த்தக புள்ளிவிவரங்கள் 35.3 பில்லியன் டாலரைத் தாண்டியது, 2023 இல் 56.7 பில்லியன் டாலர் என்கிற புதிய உச்சத்தைப் பதிவுசெய்தது, அதே நேரத்தில் 2024 இன் முதல் பாதி ஏற்கனவே 30 பில்லியன் டாலரைத் தொட்டுள்ளது மற்றும் 60-பில்லியன் டாலரைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது." என்று கூறினார். .
முக்கியத்துவம்
பிப்ரவரி 2022 இல் தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் போரை அடுத்து புதினின் முதல் இந்தியா வருகை இதுவாக இருக்கும்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. அவர் அடுத்த ஆண்டு குவாட் உச்சிமாநாட்டிற்காக இந்தியாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதினின் இந்தியப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையே தங்கள் தலைவர்களின் பரஸ்பர வருடாந்திர பயணங்களுக்கான கட்டமைக்கப்பட்ட கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறது. இந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற 22வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டிற்கு மாஸ்கோவில் தமக்கும் அவரது தூதுக்குழுவினருக்கும் அளித்த அன்பான விருந்தோம்பலுக்கு ஜனாதிபதி புதினுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, 23வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டிற்கு 2025ல் இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார் என்று வெளியுறவுத்துறை அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த வாரம், ரஷ்யாவின் முதல் துணைப் பிரதமர் டெனிஸ் மாந்துரோவ், இந்தியத் தலைமையுடன் இருதரப்பு மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து முக்கிய விவாதங்களை நடத்துவதற்காக இந்தியா வந்தார். மும்பையில் நடந்த ரஷ்ய-இந்திய வணிக மன்றத்தின் முழுமையான அமர்வில் மந்துரோவ் பங்கேற்றார்.இந்தக் கூட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார மற்றும் வணிக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“