Advertisment

உக்ரைன் பகுதிகளை இணைக்கும் ரஷ்யா பிரகடனத்திற்கு எதிராக ஐ.நா தீர்மானம்; வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

உக்ரைனின் நான்கு பகுதிகளை இணைப்பதாக பிரகடனம் செய்த ரஷ்யா; இணைப்பை சட்டவிரோதம் என கூறி ஐ.நா.,வில் தீர்மானம்; வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

author-image
WebDesk
New Update
மியான்மர் தொடர்பான ஐ.நா தீர்மானம் – இந்தியா வாக்களிக்க மறுப்பு… உலகச் செய்திகள்

ரஷ்யாவின் "சட்டவிரோத வாக்கெடுப்பு" மற்றும் நான்கு உக்ரைன் பிரதேசங்களை இணைத்ததைக் கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட வரைவுத் தீர்மானத்தை இந்தியா வெள்ளிக்கிழமை புறக்கணித்தது.

Advertisment

ரஷ்யா அதை வீட்டோ செய்ததால் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. 15 நாடுகளைக் கொண்ட கவுன்சிலில், 10 நாடுகள் தீர்மானத்திற்கு வாக்களித்தன, இந்தியா, சீனா, காபோன் மற்றும் பிரேசில் ஆகியவை வாக்களிக்கவில்லை.

அமெரிக்காவும் அல்பேனியாவும் முன்வைத்த வரைவுத் தீர்மானத்தின் மீது 15 நாடுகளைக் கொண்ட UNSC வாக்களித்தது. தீர்மானம் ரஷ்யாவின் "உக்ரைனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் உள்ள பிராந்தியங்களில் சட்டவிரோத வாக்கெடுப்பு என்று அழைக்கப்படும் அமைப்புக்கு" கண்டனம் தெரிவித்தது.

வரைவுத் தீர்மானத்தில் வாக்களிக்காத நிலையில், உக்ரைனில் வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு இந்தியா அழைப்பு விடுத்ததுடன், பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதற்கான பாதைகளைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாக செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் 23 மற்றும் 27 க்கு இடையில் ரஷ்யாவின் தற்காலிக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஜ்ஜியா பகுதிகளில் எடுக்கப்பட்ட "சட்டவிரோதமான வாக்கெடுப்பு" தொடர்பான ரஷ்யாவின் செயல்பாடுகளை "சட்டவிரோத நடவடிக்கைகள்" என்று அறிவித்ததுடன் அவற்றிற்கு “செல்லுபடியாகும் தன்மை" இல்லை என்றும் மற்றும் ரஷ்யாவால் இந்த பிராந்தியங்களில் ஏதேனும் "உருப்படியான இணைப்பு" உட்பட, உக்ரைனின் இந்தப் பகுதிகளின் நிலையை மாற்றுவதற்கான அடிப்படையை உருவாக்க முடியாது, என்றும் தீர்மானம் அறிவித்தது.

உக்ரைனில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகளால் இந்தியா மிகவும் கவலையடைந்துள்ளதாகக் கூறிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ், மனித உயிர்களைப் பலி கொடுத்து எந்தத் தீர்வையும் எட்ட முடியாது என்று இந்தியா எப்போதும் வாதிடுகிறது என்று கூறினார்.

"வன்முறை மற்றும் விரோதப் போக்கை உடனடியாக நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரால் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த நேரத்தில் அது அச்சுறுத்தலாகத் தோன்றினாலும், கருத்து வேறுபாடுகள் மற்றும் தகராறுகளைத் தீர்ப்பதற்கான ஒரே பதில் உரையாடல் மட்டுமே,” என்று ருசிரா காம்போஜ் கூறியதாக பி.டி.ஐ கூறியுள்ளது.

"அமைதிக்கான பாதையானது, இராஜதந்திரத்தின் அனைத்து வழிகளையும் திறந்து வைத்திருக்க வேண்டும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உட்பட உலகத் தலைவர்களுடனான தனது விவாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி இதை "சந்தேகத்திற்கு இடமின்றி" தெரிவித்துள்ளார் என்றும் ருசிரா காம்போஜ் கூறினார்.

கடந்த வாரம் உயர்மட்ட பொதுச் சபை அமர்வின் போது, ​​உக்ரைன் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கைகளையும் ருசிரா காம்போஜ் குறிப்பிட்டார்.

"இன்றைய சகாப்தம் போரின் சகாப்தம் அல்ல" என்று மோடியின் சமீபத்திய கருத்துக்களை புதினுக்கு மீண்டும் வலியுறுத்திய ருசிரா காம்போஜ், உடனடி போர்நிறுத்தம் மற்றும் மோதலில் தீர்வைக் கொண்டுவருவதற்கான அமைதிப் பேச்சுக்களை விரைவில் தொடங்கும் என்று இந்தியா உண்மையிலேயே நம்புகிறது என்றும் கூறினார்.

இந்த மோதலின் தொடக்கத்திலிருந்தே இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாகவும் நிலையானதாகவும் உள்ளது. "உலகளாவிய ஒழுங்குமுறை ஐ.நா. சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் இறையாண்மைக்கான மரியாதை மற்றும் அனைத்து அரசாங்கங்களின் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றின் கொள்கைகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. சொல்லாட்சி அல்லது பதற்றம் அதிகரிப்பதில் யாருக்கும் விருப்பமில்லை," என்று ருசிரா காம்போஜ் கூறினார்.

15 உறுப்பினர்களைக் கொண்ட சக்திவாய்ந்த ஐ.நா அமைப்பு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வீடியோ டெலி கான்பரன்ஸ் மூலம் உரையாற்ற அழைத்தப்போது, 2022 ஆகஸ்ட் 24 அன்று, உக்ரைனுக்காக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த "செயல்முறை வாக்கெடுப்பின்" போது, ​​இந்தியா முதல் முறையாக ரஷ்யாவிற்கு எதிராக வாக்களித்தது நினைவிருக்கலாம். இதற்கு முன், இந்தியா பலமுறை ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்காமல் ஒதுங்கியிருந்தது.

PTI இன் படி, சமீபத்திய தீர்மானம் அனைத்து அரசாங்கங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் சிறப்பு முகமைகள் உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஜ்ஜியா ஆகிய பிராந்தியங்களின் நிலைகளில் எந்த மாற்றத்தையும் அங்கீகரிக்க வேண்டாம் என்று ரஷ்யாவின் "சட்டவிரோத நடவடிக்கைகளின்" அடிப்படையில் அழைப்பு விடுத்துள்ளது. செப்டம்பர் 23 முதல் 27 வரை எடுக்கப்பட்ட சட்டவிரோத வாக்கெடுப்பு, மற்றும் அத்தகைய மாற்றப்பட்ட நிலையை அங்கீகரிப்பதாகக் கருதப்படும் எந்தவொரு நடவடிக்கை அல்லது கையாளுதலிலிருந்தும் விலகி இருக்க வேண்டும், என்றும் தீர்மானம் கூறுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Ukraine Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment