கொரோனா முதல் தடுப்பு மருந்தை அறிவித்த ரஷ்யா: அதிபர் மகளுக்கே பரிசோதனை

world’s first Covid-19 vaccine: அனைத்து ஒழுங்குமுறை நடைமுறைகளும் இந்த தடுப்பு மருந்துக்கு உட்படுத்தப்பட்டது

world’s first Covid-19 vaccine: அனைத்து ஒழுங்குமுறை நடைமுறைகளும் இந்த தடுப்பு மருந்துக்கு உட்படுத்தப்பட்டது

author-image
WebDesk
New Update
கொரோனா முதல் தடுப்பு மருந்தை அறிவித்த ரஷ்யா: அதிபர் மகளுக்கே பரிசோதனை

மாஸ்கோவின் கமலேயா நிறுவனம் உருவாக்கிய  உலகின் முதல் கோவிட் -19 தடுப்பு மருந்துக்கு, ரஷ்யா சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்தார். மனிதர்களுக்குச் செலுத்தப்பட்டு மருத்துவப் பரிசோதனைகள் தொடங்கி இரண்டு மாதங்கள் முடிவடையாத நிலையில், இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் செயல்திறனை சோதிப்பதற்கான மருத்துவ பரிசோதனைகளின் இறுதி கட்டங்கள் தொடர்ந்தாலும், இந்த ஒப்புதல்  வெகுஜனப் பயன்பாட்டிற்குத் தயாராகும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

Advertisment

ஆகஸ்ட் 10-12 ஆகிய தேதிகளுக்குள் ரஷ்யா தனது முதல் நாவல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை ‘பதிவு செய்ய’ திட்டமிட்டிருப்பதாக ப்ளூம்பெர்க்கின் அறிக்கை தெரிவிக்கிறது.

ரஷ்யாவின் இந்த வேகம், தடுப்பூசிப் பந்தயத்தில் வெல்வதற்கான அதன் உறுதியை  எடுத்துரைக்கிறது என்றாலும், அறிவியல் மற்றும் மக்களின் பாதுகாப்பைத் தாண்டி தேசத்தின் கவுரத்தை அந்த நாடு முதன்மைபடுத்துகிறதோ? என்ற கேள்வியும், கவலையும் மக்கள் மனதில் எழுந்து வருகிறது.

"அனைத்து ஒழுங்குமுறை நடைமுறைகளும் இந்த தடுப்பு மருந்துக்கு உட்படுத்தப்பட்டது. தனது இரண்டு மகள்களில் ஒருவருக்கு தடுப்பு மருந்து நிர்வகிக்கப் பட்டதாகவும், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிவதாகவும் ரஷ்யா அதிபர் புடின் கூறியதாக" ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

Advertisment
Advertisements

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

இதற்கிடையே,சுகாதார பணியாளர்கள், ஆசிரியர்கள், ஆபத்து நிறைந்த பிரிவினருக்கு முதலில் கொரோனா தடுப்பு மருந்து நிர்வகிக்க அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.

மேற்கத்திய ஆய்வகங்களிலிருந்து தடுப்பு மருந்து  ஆராய்ச்சியைத் திருட ரஷ்யா ஹேக்கர்களை பயன்படுத்துவதாக, கடந்த மாதம் யு.எஸ், பிரிட்டன், கனடா  போன்ற நாடுகள் குற்றம் சாட்டியதை அடுத்து, தடுப்பு மருந்து தயாரிப்பில் ரஷ்யாவின்  நம்பகத் தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டது.

21ம் நூற்றாண்டில், அமெரிக்கா, சீனாவுடன் போட்டியிடும் திறன் கொண்ட உலகளாவிய சக்தியாக தன்னை முன்னெடுக்க, இந்த  கொரானா தடுப்பு மருந்து ரஷ்யாவிற்கு இன்றியமையாகி விடுகிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், கொரோனா வைரஸ் உட்பட பல்வேறு மருந்துகளுக்கான மருத்துவ பரிசோதனைகளின் நேரத்தை குறைக்க புடின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக ஏ.பி நிறுவனம் தெரிவித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Corona Virus Corona Coronavirus

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: