scorecardresearch

ரஷ்யா- உக்ரைன் போர்! கவனிக்க வைக்கும் சிறிய ரசெஸ்ஸோ நகரம்.. என்ன காரணம்?

ரசெஸ்ஸோ அல்லது அங்கிருந்து வரும் கான்வாய்கள் மீது ரஷ்ய தாக்குதலின் அச்சுறுத்தல் எப்போதும் இருப்பதற்கான காரணமும் இதுதான்.

Russia Ukraine Crisis
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலிருந்து வெளியேறும் அகதிகள் போலந்து வழியாக கோயர்லிட்ஸ் வந்தடைந்தனர். (ராய்ட்டர்ஸ்)

தென்கிழக்கு போலந்தில் உள்ள, வெறும் 2 லட்சம் மக்கள்தொகை மற்றும் சுமார் 10 கிமீ அகலம் கொண்ட சிறிய ரசெஸ்ஸோ (Rzeszow) நகரம், ஒரு பாரிய இராணுவ பரிமாற்ற நடவடிக்கையின் மையமாக தொடர்கிறது, இது ரஷ்யாவிற்கு எதிராக எதிர்பாராத வகையில் உறுதியான பாதுகாப்பை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.

ரசெஸ்ஸோ நகரின் மையத்தில் சிட்டி ஹால் உள்ளது, இது போலந்தின் வெள்ளை, சிவப்பு நிறத்துடன் உக்ரைனின் நீலம், மஞ்சள் கொடியுடன் உள்ளது.

எல்லையில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ரசெஸ்ஸோவின், சிவில் விமான நிலையம் வழியாக, மேற்கில் இருந்து அனுப்பப்பட்ட ஆயுதங்கள் உக்ரைனுக்கு கொண்டு செல்லப்படுகின்றன, அதன்பின் கீவில் இருந்து மரியுபோல் வரை- முன்னணிப் பகுதிகளுக்குச் செல்கிறது.

போலந்தின் உயர்மட்ட இராணுவ ஆய்வாளர் மரேக் ஸ்வியர்சின்ஸ்கி இதுகுறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், ரசெஸ்ஸோ ஆயுதங்களை மாற்றுவதற்கான “முக்கிய இடமாக” மாறியுள்ளது, இது ரஷ்யாவின் முன்னோக்கிய நடவடிக்கைகளை நிறுத்தியது.

இராணுவ உபகரணங்கள் ரசெஸ்ஸோ- ஜசியோன்கா விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன், அது டிரக்குகள் மற்றும் பிற உள்ளூர் வாகனங்களில் ஏற்றப்பட்டு, ஐரோப்பாவின் மிக நீளமான கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையான E40 வழியாக, உக்ரைனுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

ரசெஸ்ஸோ அல்லது அங்கிருந்து வரும் கான்வாய்கள் மீது ரஷ்ய தாக்குதலின் அச்சுறுத்தல் எப்போதும் இருப்பதற்கான காரணமும் இதுதான்.

இதுவரை எந்த தாக்குதலும் நடக்கவில்லை என்றாலும்,” ரசெஸ்ஸோவின் செயல்பாடு இன்னும் ஆபத்தானது” என்று ஸ்வியர்சின்ஸ்கி கூறினார்.

மேலும் இராணுவ ஆய்வாளரின் கூற்றுப்படி, உக்ரைனின் 90 சதவீத ஆயுதங்கள் இன்னும் சோவியத் அல்லது ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்தவை. அன்டி-டேங்க் துப்பாக்கிகள் என்று வரும்போது, ​​​​அது உக்ரேனிய மற்றும் மேற்கத்திய தயாரிப்புகளுக்கு இடையில் பாதியாக பிரிக்கப்பட்டுள்ளது.

மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அனுப்பும் பெரும்பாலானவை, அன்டி-டேங்க் மற்றும் அன்டி-ஏர் கிராஃப்ட் ஆயுதங்களாகும்.

ஆனால் போலந்து’ கிழக்கு முகாமின் ஒரு பகுதியாக இருந்ததால், சோவியத் யூனியனுடனான அதன் வரலாற்று தொடர்புகள் இந்த நேரத்தில் உக்ரைனுக்கு மகத்தான உதவியாக உள்ளன. “சோவியத் திறன் கொண்ட ஆயுதங்களைக் கொண்டிருந்த போலந்து போன்ற நாடுகள் மட்டுமே உக்ரைனுக்கு வெடிமருந்துகளை அனுப்ப உதவ முடியும்” என்று ஸ்வியர்சின்ஸ்கி கூறினார்.

ஒவ்வொரு நாடும் அனுப்பிய ஆயுதங்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை, ஆனால் அமெரிக்கா மிகப்பெரிய பங்கை அனுப்பியுள்ளது, ஏற்கனவே 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் செலவழித்துள்ளது. இங்கிலாந்தும் கூட, “அன்டி டேங்க் ஆயுதங்களை அனுப்பியுள்ளது, என்றார்.

ஆயுதங்கள் எதுவும் நேட்டோவால் அனுப்பப்படவில்லை, ஆனால் அதன் சில உறுப்பு நாடுகளால் அனுப்பப்பட்டது என்று ஸ்வியர்சின்ஸ்கி தெளிவுபடுத்தினார்.

கடந்த சில வாரங்களாக எல்விவில் இருக்கும் அட்லாண்டிக் கவுன்சிலின் உலகளாவிய விவகார ஆய்வாளர் மைக்கேல் போசியுர்கிவ் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில்: ஃபிளாக் ஜாக்கெட்டுகள் முதல் ஹெல்மெட் வரை, தரையிலிருந்து வான் ஏவுகணைகள் வரை அனைத்தும்-“மேற்கத்திய நட்பு நாடுகள் ஆயுதங்களை வழங்குகின்றன. இவை உக்ரைன் தன்னைத் தற்காத்துக் கொள்ள உதவும் விஷயங்கள். ஆனால் உக்ரைன் உண்மையில் கேட்பது அதைவிட அதிகம்.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, “இன்னும் நிறைய கேட்கிறார், மேலும் சில ஆயுதங்கள் தீர்ந்துவிட்டன”. முழுக்க முழுக்க தன்னார்வத் தொண்டர்களைக் கொண்ட பிராந்திய பாதுகாப்புப் படைகளுக்கு கூட, “ஃப்ளாக் ஜாக்கெட்டுகள் மற்றும் ஹெல்மெட்கள் போன்ற எளிய விஷயங்கள் மிகவும் தேவைப்படுகின்றன” என்று கூறினார்.

நிபுணர்களின் கூற்றுப்படி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ இந்த அளவிலான நடவடிக்கைக்கு தங்கள் தளவாட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக, போலந்தில் இராணுவம் மற்றும் இராணுவம் அல்லாத பணியாளர்களை வைத்துள்ளன. மேலும், சாலை வழிகளைத் தவிர, சில உபகரணங்கள் ரயில்கள் மூலம் அனுப்பப்படுவதாக தகவல்கள் உள்ளன, இது குறித்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: Russia ukraine crisis rzeszow town continues to be the hub of a military transfer operation