Advertisment

ரஷ்ய தாக்குதல்.. மாஸ்கோ மீது குற்றம்சாட்டும் உக்ரைன்? என்ன காரணம்?

நகரத்தில் தண்ணீர், உணவு மற்றும் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது, மேலும் செல்போன் நெட்வொர்க்குகள் முடங்கியுள்ளன. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை தேடிச் செல்லும் போது கடைகள் சூறையாடப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
Russia Ukraine war

உக்ரைனின் இர்பின் நகரில் வயதான பெண்ணுக்கு உக்ரேனிய படைவீரர்கள் உதவுகிறார்கள். (புகைப்படம் AP /Andriy Dubchak)

ரஷ்யப் படைகள் ஷெல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியதால் உக்ரைனில் நெருக்கடி இன்னும் மோசமாகியுள்ளது.

Advertisment

இரு தரப்புக்கும் இடையேயான மூன்றாவது சுற்று பேச்சு வார்த்தையில், சண்டையில் இருந்து பொதுமக்கள் தப்பிக்க அனுமதிக்கும் பாதுகாப்பான வழித்தடங்களை அமைப்பதில் சிறிய முன்னேற்றம் இருப்பதாக உக்ரேனிய உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அந்த வழித்தடங்கள் செவ்வாய்கிழமை செயல்படத் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக ரஷ்யாவின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறினார்.

படையெடுப்பின் இரண்டாவது வாரத்தில், ரஷ்ய துருப்புக்கள் தெற்கு உக்ரைனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளன, ஆனால் வேறு சில பிராந்தியங்களில் ஸ்தம்பித்துள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கோரும் போர் விமானங்களை வழங்குவது குறித்து பல நாடுகள் விவாதித்து வருவதாக அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தெற்கு துறைமுகமான மரியுபோல், நகரில்’ ஏறக்குறைய 430,000 மக்கள் தொகையில் பாதி பேர் தப்பிச் செல்வவதற்கு முனைப்புடன் இருக்கின்றனர்.

நகரத்தில் தண்ணீர், உணவு மற்றும் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது, மேலும் செல்போன் நெட்வொர்க்குகள் முடங்கியுள்ளன. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை தேடிச் செல்லும் போது கடைகள் சூறையாடப்பட்டுள்ளன.

நகருக்குள் செல்லும் போலீசார், மக்களை வெளியேற்றுவதற்காக ஒலிபெருக்கிகள் மூலம் அதிகாரபூர்வ செய்திகள் ஒலிபரப்பப்படும் வரை மக்கள் தங்குமிடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தினர்.

மரியுபோலில் உள்ள மருத்துவமனைகள்’ அன்டி-பயாடிக்ஸ் மற்றும் வலி நிவாரணி மருந்துகளின் கடுமையான பற்றாக்குறை உள்ளன. இதனால் மருத்துவர்கள் அவை இல்லாமல் சில அவசர சிகிச்சைகளை செய்தனர்.

தலைநகர் கெய்வில், வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நூற்றுக்கணக்கான சோதனைச் சாவடிகளைக் கட்டி, கிட்டத்தட்ட 4 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தைப் பாதுகாக்கின்றனர்.

"ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு சோதனைச் சாவடியும், தேவைப்பட்டால் நாங்கள் மரணம் வரை போராடுவோம்" என்று மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறியுள்ளார்.

1.4 மில்லியன் மக்களைக் கொண்ட உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில், அடுக்குமாடி கட்டிடங்கள் மீது கடும் ஷெல் தாக்குதல்கள் நடந்தன.

"அது எங்கள் கீழ் நான்காவது மாடியைத் தாக்கியது என்று நான் நினைக்கிறேன்," என்று டிமிட்ரி செடோரென்கோ தனது கார்கிவ் மருத்துவமனை படுக்கையில் இருந்து கூறினார். "உடனடியாக, அனைத்தும் எரிந்து விழ ஆரம்பித்தன." அவருக்கு அடியில் தரை இடிந்து விழுந்தபோது, ​​அவர் தனது அண்டை வீட்டுக்காரர்கள் சிலரின் உடல்களைக் கடந்து மூன்றாவது மாடி வழியாக வெளியே வந்தார்.

கீவ் பகுதியில், குறிப்பாக புச்சா, ஹோஸ்டோமெல், வோர்சல் மற்றும் இர்பின் போன்ற பகுதிகளில் கடுமையான போர்கள் தொடர்ந்ததாக கிளிட்ச்கோ தெரிவித்தார்.

சில மைல்களுக்கு அப்பால், சிறிய நகரமான ஹொரென்காவில், ஷெல் வீச்சு ஒரு பகுதியை சாம்பலாகவும் கண்ணாடித் துண்டுகளாகவும் மாற்றியது.

தெற்கில், மைகோலாய்வில் ரஷ்யப் படைள்’ தங்கள் தாக்குதலைத் தொடர்ந்தன, கருங்கடலில் அரை மில்லியன் மக்கள் வசிக்கும் கப்பல் கட்டும் மையத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்தது.

நெதர்லாந்தின் ஹேக்கில், மாஸ்கோ பரவலான போர்க்குற்றங்களைச் செய்வதாகக் கூறி, ரஷ்யாவின் படையெடுப்பை நிறுத்த உத்தரவிடுமாறு உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தை நாடியது.

ரஷ்யா "இடைக்கால முற்றுகைப் போரை நினைவூட்டும் தந்திரங்களைக் கையாள்கிறது. நகரங்களைச் சுற்றி வளைத்து, தப்பிக்கும் வழிகளைத் துண்டித்து, பொதுமக்களை கடும் ஆயுதங்களால் தாக்குகிறார்கள்,” என்று உக்ரைனின் சட்டக் குழுவின் உறுப்பினரான ஜொனாதன் கிம்ப்லெட் கூறினார்.

ஆனால் நீதிமன்ற நடவடிக்கைகளை ரஷ்யா புறக்கணித்தது.

தொடர்ந்து ரஷ்ய ஷெல் தாக்குதலுக்கு மத்தியில்’ வார இறுதியில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான பாதையை அமைப்பதற்கான முயற்சிகள் வீழ்ச்சியடைந்தன. திங்கட்கிழமை பேச்சுக்கள் தொடங்குவதற்கு முன், ரஷ்யா ஒரு புதிய திட்டத்தை அறிவித்தது, பொதுமக்கள் கிய்வ், மரியுபோல், கார்கிவ் மற்றும் சுமியை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று அது கூறியது.

பின்னர், ரஷ்யாவின் ஐ.நா. தூதர் வசிலி நெபென்சியா, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், ரஷ்யா செவ்வாய்கிழமை காலை போர்நிறுத்தத்தை மேற்கொள்ளும் என்றும், கெய்வ், மரியுபோல், சுமி மற்றும் செர்னிகோவ் ஆகிய இடங்களிலிருந்து மனிதாபிமான வழித்தடங்களை திறக்கும் என்றும் கூறினார்.

ஆனால் மனிதாபிமான வழித்தடங்கள் தொடர்பான உடன்படிக்கைக்கு பதிலாக, திங்களன்று உக்ரைனுக்கு கிடைத்தது "ரஷ்ய டாங்கிகள், ரஷ்ய கிராட் ராக்கெட்டுகள்,தான்” என்று தனது தினசரி வீடியோவில் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டினார்.

பல வெளியேற்ற பாதைகள் ரஷ்யா அல்லது அதன் நட்பு நாடான பெலாரஸை நோக்கி சென்றன, இது படையெடுப்பிற்கான ஏவுதளமாக செயல்பட்டது. உக்ரைன் அதற்குப் பதிலாக, ஷெல் தாக்குதல்கள் இல்லாத நாட்டின் மேற்குப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கும் எட்டு வழிகளை முன்மொழிந்தது.

மரியுபோலுக்கான போர் முக்கியமானது, ஏனெனில் 2014 இல் உக்ரைனிலிருந்து ரஷ்யா கைப்பற்றிய கிரிமியாவிற்கு ஒரு நில நடைபாதையை நிறுவ மாஸ்கோ அனுமதிக்கும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் 406 சிவிலியன் இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது ஆனால் உண்மையான எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதாகக் கூறியது. இந்த படையெடுப்பு 1.7 மில்லியன் மக்களை உக்ரைனை விட்டு வெளியேறவும் செய்துள்ளது.

உக்ரைன் கிரிமியாவை ரஷ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது மற்றும் மாஸ்கோ ஆதரவு பிரிவினைவாத போராளிகளால் கட்டுப்படுத்தப்படும் கிழக்குப் பகுதிகளை சுதந்திரமாக அங்கீகரிக்க வேண்டும் என்பது உட்பட, படையெடுப்பை நிறுத்துவதற்கான தொடர்ச்சியான கோரிக்கைகளை திங்களன்று மாஸ்கோ மீண்டும் அறிவித்தது. நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சர்வதேச அமைப்புகளில் சேராது என்பதற்கு ஏதுவாக’ உக்ரைன் தனது அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.

அந்த கோரிக்கைகளை உக்ரைன் ஏற்கனவே நிராகரித்துள்ளது.

ரஷ்ய பொருளாதாரத்திற்கு முக்கியமான உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதி புறக்கணிப்பு உட்பட அதற்கு எதிராக இன்னும் கூடுதலான நடவடிக்கைகளுக்கு ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார், "ரஷ்யா நாகரீக விதிகளை கடைபிடிக்க விரும்பவில்லை என்றால், அவர்கள் நாகரீகத்திலிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறக்கூடாது" என்று அவர் ஒரு வீடியோவில் கூறினார்.

மேலும் போர் விமானங்களையும் கேட்டுள்ளார்.

மேற்கத்திய நாடுகள் டாங்கி எதிர்ப்பு மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் போன்ற ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பும் நிலையில், போர் விமானங்களை அனுப்புவது மாஸ்கோ போரில் நேரடியாக ஈடுபட்டதாக கருதலாம் என்று சில அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

இப்போது நேட்டோ உறுப்பினர்களாக இருக்கும் முன்னாள் சோவியத் பிளாக் நாடுகள் உக்ரைனுக்கு சொந்த சோவியத் கால மிக் விமானங்களை அனுப்பலாம், உக்ரேனிய விமானிகள் பறக்க பயிற்சி பெற்றுள்ளனர். அந்த நாடுகளின் விமானங்களுக்குப் பதிலாக அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட F-16 விமானங்களை அமெரிக்கா மாற்றும்.

ரஷ்யாவின் படையெடுப்பு’ அருகிலுள்ள நாடுகளுக்கு போர் பரவக்கூடும் என்று பயமுறுத்தியுள்ளது. நேட்டோ உறுப்பினர்களாக இருக்கும் முன்னாள் சோவியத் குடியரசுகளான லாட்வியா, லிதுவேனியா மற்றும் எஸ்டோனியா ஆகிய பால்டிக் மாநிலங்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மின்னல் பயணத்தைத் தொடங்கி உள்ளார்.

நேட்டோ நாட்டிற்குள் துருப்புக்களை அனுப்புவதில் ஆர்வம் காட்டவில்லை, மேலும் ஒரு பரந்த போரைத் தூண்டிவிடுமோ என்ற அச்சத்தில்’ விமானங்களை பறக்க தடை விதிக்கும் ஜெலென்ஸ்கியின் வேண்டுகோளை நிராகரித்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ukraine Russia United Nations
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment