ரஷ்ய ராணுவ விமானத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள உக்ரைன் மீது, விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்க, நேட்டோவுக்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்தார். ஆனால், நேட்டோ தலைவர்கள் இப்போதைக்கு தங்களுக்கு விருப்பமில்லை என்று கூறிவிட்டனர், அத்தகைய நடவடிக்கை ரஷ்யாவுடனான ஒரு பரந்த போருக்கு தங்களை இழுத்துவிடும் என்று அஞ்சுகின்றனர்.
விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிப்பது (no-fly zone) என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் விமானங்களை தடை செய்வதற்கான உத்தரவு. இத்தகைய மண்டலங்கள் சில சமயங்களில்’ அரசு கட்டிடங்கள் அல்லது பொது இடங்கள் மீது பாதுகாப்பு காரணங்களுக்காக அல்லது மத மற்றும் கலாச்சார காரணங்களுக்காக புனித தளங்கள் மீது விதிக்கப்படுகின்றன.
மேலும் மோதல்களின் போது, இராணுவ விமானங்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கவும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் விமானங்களை தடை செய்வதற்கான உத்தரவு விதிக்கப்படுகின்றன.
பாரசீக வளைகுடாப் போரில் இருந்து’ விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிப்பதின் நவீன பயன்பாடு உருவானது. 1991 இல் குவைத்தின் மீதான ஈராக் படையெடுப்பை அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் முறியடித்த பிறகு, ஈராக்கின் தலைவர் சதாம் ஹுசைன், ஹெலிகாப்டர் கன்ஷிப்களைப் பயன்படுத்தி உள்நாட்டில் கிளர்ச்சிகளை முறியடித்தார், பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்றார்.
குவைத்தில் சதாமுக்கு எதிராக அமைந்த கூட்டணி, அவருக்கு எதிராக முழு அளவிலான பிரச்சாரத்தை மேற்கொள்ள விரும்பவில்லை. அதற்கு பதிலாக, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை ஈராக்கின் வடக்கு மற்றும் தெற்கில், அவரது படைகளின் வான்வழித் தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாக்கும் ஒரு வரையறுக்கப்பட்ட நடவடிக்கையாக, அந்த பகுதியில் விமானங்கள் பறப்பதற்குத் தடை விதித்தன.
2003 ஆம் ஆண்டு ஈராக்கில் போர் நடக்கும் வரை அந்த நடவடிக்கை தொடர்ந்தன. ஆனால், இந்த முயற்சிக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை என்றும், ஈராக்கிய வான் பாதுகாப்பு உள்கட்டமைப்பு மீதான அமெரிக்க தாக்குதல்கள் பொதுமக்களைக் கொன்றதாகவும் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
நேட்டோ, ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதலுடன், பால்கன் மோதலின் போது 1993 முதல் 1995 வரை போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா மீது விமானங்கள் பறப்பதற்குத் தடை விதித்தது.
2011 இல் லிபியாவில் சர்வாதிகாரி மொயம்மர் கடாபி ஒரு கிளர்ச்சியை நசுக்க முயன்றபோது கூட்டணி மீண்டும் அவ்வாறு செய்தது.
அதிக எண்ணிக்கையிலான தரைப்படைகளை ஈடுபடுத்தாமல், ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களை நம்பி, நடவடிக்கை எடுக்கும் போது, விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிப்பதை நாடுகள் அனுமதிக்கலாம். ஆனால் அத்தகைய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது, வான் எதிர்ப்பு பாதுகாப்புகளை அழிப்பது அல்லது விமானத்தை சுட்டு வீழ்த்துவது உட்பட குறிப்பிடத்தக்க பலத்தை பயன்படுத்துவதையும் உள்ளடக்கும்.
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புதின், உக்ரைன் மீது’ விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்க முயற்சிக்கும் எந்தவொரு நாடும் உண்மையில் "ஆயுத மோதலில் பங்கேற்கும்" என்று எச்சரித்துள்ளார்.
நேட்டோவின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் வெள்ளியன்று, "ஐரோப்பாவில் ஒரு முழு அளவிலான போருக்கு" வழிவகுக்கும் என்ற அச்சத்தில் அதன் உறுப்பினர்கள் ”விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிப்பதை” நிராகரித்ததாகக் கூறினார்.
உக்ரைனின் தலைவரான ஜெலென்ஸ்கி, நேட்டோ அத்தகைய நடவடிக்கையை எடுக்க மறுத்ததால், போரைத் தொடர ரஷ்யாவிற்கு "பச்சை கொடி" காட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“