ரஷ்யாவில் பரபரப்பு: வெட்டப்பட்ட நிலையில் 54 கைகள் கண்டெடுப்பு!

தொலைக்காட்சிகளில் ப்ரேக்கிங் நியூஸாக ஒளிப்பரப்பட்டு வருகின்றன.

ரஷ்யாவின்  காப்ரோவஸ்க் என்ற பகுதியில் வெட்டப்பட்ட நிலையில், 53 கைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பகுதியில் இருக்கும் ஆமூர் என்ற ஆற்றிலிருந்து இந்த கைகள் கண்டெடுக்கப்பட்டன. தகவலறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்த காவல் துறையின் இதுக் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. அழிகிய நிலையில், 54 கைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அங்குள்ள தொலைக்காட்சிகளில் ப்ரேக்கிங் நியூஸாக ஒளிப்பரப்பட்டு வருகின்றன.

இந்த கைகள் உடற்க்கூறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.அபோது தான் இந்த கைகள் ஒவ்வொன்றாக தென்பட ஆரம்பித்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளன.

54 கைகள் 27 ஜோடிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இருக்கும் கைரேகைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. இதனால் கைகள் யாருடையது என்று கண்டுப்பிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆய்விற்கு பிறகே வெட்டப்பட்ட கைகளில் எத்தனை பேர் ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற முழு விபரம் தெரிய வரும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

×Close
×Close