வாத்து குடும்பம் சாலையை கடக்க போக்குவரத்தை நிறுத்திய ரஷ்ய காவல்துறை - வைரல் வீடியோ

ஊரடங்கு உத்தரவெல்லாம் நமக்குத்தான். வாத்துகளுக்கு இல்லை.

உலகெங்கும் கொரோனா மனிதர்களை தாண்டவமாடினாலும், மனிதம் மட்டும் மரித்துவிடாமல் இருக்கிறது. ரஷ்ய தலைநகரம் மாஸ்கோவில், சாலைகளை கடக்க முயன்று கொண்டிருந்தது வாத்துக் குடும்பம் ஒன்று. ஆனால் தொடர்ந்து இரு பக்கங்களிலும் வண்டிகள் வந்து கொண்டே இருந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தன. அப்போது அந்த பகுதியில் வந்த காவல்துறையினர் என்ன செய்தார்கள் என்று பாருங்கள்.

மேலும் படிக்க : புதுவை டூ காரைக்கால் பஸ் ரெடி : கடலூர், நாகையில் இறங்கவோ, ஏறவோ முடியாது!

இந்த வாத்துக் குடும்பத்தை பார்த்த காவல்துறையினர், தாங்கள் வந்து கொண்டிருந்த பாதையில் இருந்து இடது பக்கம் திரும்பி, அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தையும் மறைத்துவிட்டனர். பின்னர் வாத்து தன் குஞ்சுகளுடன் சாலையின் மறு எல்லையை அடைந்து சந்தோசமாக நடக்கத் துவங்கியது. இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் நெகிழ்ச்சி அடைந்து போயிருக்கிறார்கள்.

மேலும் படிக்க : ஆசிட் அட்டாக்கை நியாயப்படுத்தும் வீடியோ : பிரபலத்தின் கணக்கை முடக்கிய டிக்டாக்

ஆஸ்திரேலியாவில் இருக்கும் ரஷ்ய தூதரகம் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவில், மாஸ்கோவில் இருக்கும் லெனின்ஸ்கை தெருவினை மறைத்து, ரஷ்ய தேசிய பாதுகாப்பு படையினர், வாத்துக் குடும்பம் ஒன்று சாலையை கடக்க உதவியுள்ளது என்று கேப்சன் போடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு மட்டுமே பொது இடங்களில் கூடுதல் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர, இவர்களுக்கு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதுவும் சரி தானே.!

மேலும் படிக்க :  பாட்டுப்பாடி வாயில்லாத ஜீவன்களை “காண்டாக்காதீங்க”! அப்பறம் இப்படித்தான் ஆகும் (வீடியோ)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close