2036 வரை புதின் தான் அதிபர்… புதிய விபரீதங்களை சந்திக்க காத்திருக்கும் ரஷ்யா!

இப்போது 67 வயதாகும் புதின் 83 வயது வரை அதிபராக ஆட்சி செய்ய முடியுமா என்று பலரும் விமர்சனத்தையும் வைத்துள்ளனர்.

Russian President Putin to be extended his rule till 2036, Viladimir Putin, Russia, international news, world news,
Russian President Putin to be extended his rule till 2036, Viladimir Putin, Russia, international news, world news,

Russian President Putin to be extended his rule till 2036 :  ரஷ்யாவில் அதிபராக பதவி வகிக்கும் ஒருவரின் பதவிகாலம் வெறும் 6 ஆண்டுகள் தான். அவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக பதவி வகிக்க இயலாது. இந்நிலையில் 2000ம் ஆண்டு முதல் 2008 வரை ரஷ்யாவின் அதிபராக பதவி வகித்தார் விளாடிமிர் புதின்.

அப்பதவியில் இருந்து பதவி விலகிய புதின் 2012ம் ஆண்டு வரை அந்நாட்டின் பிதமராக பதவி வகித்தார். பிறகு 2012ம் ஆண்டில் மீண்டும் ரஷ்யாவின் அதிபராக அவர் தேர்வு செய்யப்பட்டார். அவருடைய ஆட்சிகாலம் 2024 வரை இருக்கின்ற நிலையில் மேலும் 12 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அரசியல் வட்டாரங்கள் முடிவு செய்தனர். அதன் விளைவாக அந்நாட்டின் அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டு வர முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இந்த மாற்றத்திற்கான முடிவினை மேற்கொள்ள மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று புதின் கூற 25ம் தேதியில் இருந்து 7 நாட்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்குச்சீட்டு முறையில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

98% வரை பதிவான வாக்குகளில் புதினே 2036ம் ஆண்டு வரை அதிபராக நீடிக்கலாம் என்று 76.9% மக்கள் வாக்களித்துள்ளனர். 21% மக்கள் இந்த சட்டத்திருத்ததிற்கு எதிராக வாக்கு பதிவு செய்துள்ளனர். இப்போது 67 வயதாகும் புதின் 83 வயது வரை அதிபராக ஆட்சி செய்ய முடியுமா என்று பலரும் விமர்சனத்தையும் வைத்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Russian president putin to be extended his rule till 2036

Next Story
பாகிஸ்தான் பங்குச் சந்தை கட்டிடம் மீது தாக்குதல்; துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலிpakistan news, pakistan latest news, pakistan stock exchange, pakistan stock exchange attack, பாகிஸ்தான் பங்குச் சந்தை கட்டிடம் மீது தாக்குதல், பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் 10 பேர் பலி, pakistan stock exchange attack today, terrorist attack in pakistan, terrorist attack in pakistan today, இம்ரான் கான் கான் கண்டனம், terrorist attack in pakistan latest news, Terror Attack in Karachi, Terror Attack in Karachi news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com