Advertisment

இலங்கை பெட்ரோலியத்துறை அமைச்சர் அர்ஜுனா ரணதுங்கா கைது

கைதான சில மணி நேரத்திலேயே அர்ஜுனா ரணதுங்கா பெயிலில் ரிலீஸ் ஆகிவிட்டதாகவும், அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இலங்கை பெட்ரோலியத்துறை அமைச்சர், அர்ஜுனா ரணதுங்கா கைது

இலங்கை பெட்ரோலியத்துறை அமைச்சர், அர்ஜுனா ரணதுங்கா கைது

இலங்கை நாட்டின் பெட்ரோலியத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் இலங்கை முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா. இவர் நேற்று மாலை கொழும்பின் டிமாடகோடாவில் உள்ள சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சில முக்கிய ஆவணங்களை எடுக்க அவரது பாதுகாலவர்களுடன் சென்றதாக கூறப்படுகிறது.

Advertisment

ஆனால், அங்கிருந்த பணியாளர்கள் அமைச்சருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். அமைச்சர் ரணதுங்காவின் பாதுகாவலர்களை ஆவணங்களை எடுக்க விடாமல் அங்கிருந்தோர் தடுத்து இருக்கிறார்கள். இதனால் இவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி சண்டை ஏற்பட்டிருக்கிறது.

அப்போது, திடீரென அமைச்சரின் பாதுகாவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த ஆரம்பித்துவிட்டனர். அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் 2 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ரணதுங்காவின் மெய்க்காப்பாளர்கள் நேற்றே கைது செய்யப்பட்டுவிட்டனர்.

இந்த நிலையில், இன்று இலங்கை பெட்ரோலிய அமைச்சகத்திற்குள் நுழைய முயன்ற அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கா கைது செய்யப்பட்டார். இவர், சமீபத்தில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், கைதான சில மணி நேரத்திலேயே அர்ஜுனா ரணதுங்கா பெயிலில் ரிலீஸ் ஆகிவிட்டதாகவும், அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment