உலகளவில் இளவயது பிரதமர் என்கிற பெருமையை பின்லாந்தின் சன்னா மரின் பெற்றுள்ளார். அங்கு நடைபெற்ற பிரதமர் பதவிக்கான தேர்தலில் 34 வயதான சன்னா மெரின் வெற்றி பெற்று, அடுத்த வாரத்தில் பதவி ஏற்க உள்ளார்.
ஃபின்லாந்து நாட்டில் சமூக ஜனநாயக கட்சி, பிற நான்கு கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஆன்டி ரின்னே (Antti Rinne) கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார். அவரின் ஆட்சிக் காலத்தில் நடந்த தபால்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தத்தைச் சரிவரக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், சமூக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 34 வயதான சன்னா மரின் (Sanna marin) ஃபின்லாந்தின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் தற்போது உலகிலேயே இளவயது பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சன்னா. மேலும் ஃபின்லாந்தின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையும் இவரைச் சேர்ந்துள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சன்னா, “மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்காக நாங்கள் இன்னும் அதிகம் உழைக்கவேண்டியுள்ளது. என் வயது மற்றும் பாலினம் பற்றி ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நான் அரசியலுக்கு வந்த காரணத்துக்காகவும் மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்காகவும் மட்டும் செயல்பட உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தன் சொந்த ஊரில் நகரசபைத் தலைவராகப் பொறுப்பேற்றதன் மூலம் 27 வயதில் அரசியலில் அடி எடுத்து வைத்தார் சன்னா. அதன்பின் நிறைய பதவிகளை வகித்து தற்போது நடக்கும் ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அரசியலுக்கு வந்த ஏழே வருடங்களில் ஒரு நாட்டின் பிரதமர் பொறுப்பை ஏற்கவுள்ளார் சன்னா மரின்.
உலகின் பிற இளம் அரசு தலைவர்கள் யார்?
உக்ரைனின் பிரதமர் ஒலெக்ஸி ஹொன்சாரூக் வயது 35, ஆனால் உக்ரேனிய அரசியல் அமைப்பில், நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியின் பதவி சக்தி வாய்ந்தது.
வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன் 35 வயது என்றும் கூறப்படுகிறது.
அயர்லாந்தின் தாவோசீச் லியோ வரட்கர் வயது 40; எஸ்டோனியாவின் பிரதமர் ஜூரி ரதாஸ் மற்றும் பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோரின் வயது 41; மற்றும் ஸ்லோவேனியாவின் பிரதமர் மர்ஜன் செரேக் மற்றும் டென்மார்க்கின் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் ஆகியோருக்கு வயது 42.
உலகின் அதிக வயதான அரசு தலைவர் மலேசியாவின் பிரதமர் மகாதிர் முகமது, 94 ஆவார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Sanna marin only 34 and set to be the worlds youngest prime minister
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை எப்போது? 3 நாட்களில் முடிவெடுக்கும் ஆளுநர்
கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதை வரவேற்கிறேன் : தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ்அழகிரி
டிராகன் பழத்திற்கு சமஸ்கிருத பெயர் : குஜராத் முதல்வரின் நடவடிக்கைக்கு காரணம் என்ன?
சீரம் இன்ஸ்டிடியூட்-ல் திடீர் தீவிபத்து : 5 பேர் பலியானதாக தகவல்