யோகாவை விளையாட்டாக அங்கிகரித்த சவுதி அரசு

சவுதி அரசு, யோகாவை விளையாட்டாக அங்கிகரித்து, ஒப்புதல் அளித்துள்ளது. சவுதியில் எவரும் யோகா கற்கலாம், ஆசிரியராக பணிப்புரியலாம்.

சவுதி வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம், யோகாவை விளையாட்டாக அங்கிகரித்து, ஒப்புதல் அளித்துள்ளது. இனி சவுதி அரேபியாவில் எவரும் யோகா கற்க, யோகா ஆசிரியராக பணிப்புரிய உரிமம் பெறலாம்.

சவுதி அரேபியாவின் முதல் யோகா பயிற்சியாளரான நௌவ் மர்வா தன் முகநூல் பக்கத்தில், யோகா ஒரு விளையாட்டாக சவுதி அரசால் அங்கிகாரம் படுத்தப்பட்டுள்ளது என பகிர்ந்திருந்தார்.

“யோகா என்றால் ஒற்றுமை. உடல், மனம், உணர்வுகளை ஒருங்கினைக்கும் யோகா கடல் தாண்டி இன்று சவுதி கரையை அடைந்துள்ளது…” என நவம்பர் 12 தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் நௌவ் மர்வா.

மேலும் அவர் முஸ்லீம் பெரும்பான்மை கொண்ட நாட்டில் சவுதியை தீவிரவாதம் மற்றும் ஊழல் இல்லா நாடக ஆக்கியதற்கு அரசர் சல்மான் பின் அப்துலசிஸ் மற்றும் இளவரசர் முகம்மது பின் சல்மான் அவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், யோகா குரு ராம்தேவ் இந்த செயலுக்காக சவுதி அரசை பாராட்டினார். யோகாவை விளையாட்டில் இணைத்து, சவுதி அரேபிய ஒரு மிக பெரிய அடியை எடுத்து வைத்துள்ளது. பல நன்மைகள் கொண்ட யோகா ஒரு மதச்சார்பற்ற பழக்கமாகும் என அவர் தெரிவித்திருந்தார்.

பெண்கள் வாகனம் ஒட்ட கூடாது என்ற தடை விதித்திருந்த சவுதி, கடந்த செப்டம்பர் மாதமே அந்த தடையை நீக்கி பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமையை அளித்தது. அதனை தொடர்ந்து தற்பொழுது யோகாவை அங்கீகரித்து விளையாட்டாக அறிவித்துள்ளது.

தற்போது இந்திய அரசு யோகாவிற்கு முக்கியத்துவம் அளித்து அதிகம் பகிர்ந்து வருகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச யோகா தினம் கொண்டாட வேண்டும் என ஐ.நா. சபைக்கு கோரிக்கை விடுத்து வந்தார். இந்த கோரிக்கையை ஏற்று ஐ.நா. ஜூன் 21 ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.

×Close
×Close