சவுதி அரேபியாவில் கொலை முதல் பயங்கரவாதம் வரை பல்வேறு வகையான குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 81 பேருக்கு, ஒரே நாளில் மரண தண்டணை விதித்து அதிரடி காட்டியுள்ளது.
1979 ஆம் ஆண்டு மக்காவில் உள்ள பெரிய மசூதியைக் கைப்பற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட 63 போராளிகளுக்கு ஜனவரி 1980-ல் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையின் எண்ணிக்கையை விட இன்று அதிக நபர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
சவுதி மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் கீழ் குற்றவாளிகளின் தலையை துண்டித்து வந்தாலும், கொரோனாவுக்கு பிறகு மரண தண்டனை வழங்குவது குறைந்துள்ளது.
சவூசி அரசு நடத்தும் ஊடக நிறுவனத்தின் அறிக்கையின்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்கொய்தா , ஹூதி ஐ.எஸ்., போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்துவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடான யேமனில் 2015 ஆம் ஆண்டு முதல் சவூதி தலைமையிலான கூட்டணி ஈரான் ஆதரவு ஹூதி போராளிகளை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 73 சவுதி அரேபியர்கள், ஏழு ஏமன்கள் மற்றும் ஒரு சிரியர் அடங்குகின்றனர். இந்த தண்டனை எங்கு வைத்து நிறைவேற்றப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
சவுதி அரேபியாவில் பொதுவாக தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை அளிக்கும் நிலையில், இவர்களுக்கு எப்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியிடவில்லை.
கடைசியாக 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் மொத்தமாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதில், அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தியதற்காக ஷியா மதகுரு உள்ள 47 பேருக்கு அப்போது தண்டனை நிறைவேற்றப்பட்டது.
2019ம் ஆண்டில் பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்ற 37 சவுதி அரேபியர்களின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பட்டத்து இளவரசர் முகமது தனது தந்தையின் கீழ் ராஜ்யத்தில் பல மாற்றங்களை செய்தார். திரையரங்குகளை திறந்தார். பெண்களை கார் ஓட்ட அனுமதித்தார்.
இருப்பினும், நூற்றுக்கணக்கான பொதுமக்களைக் கொன்ற யேமனில் வான்வழித் தாக்குதல்களை மேற்பார்வையிடும் போது, வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர் ஜமால் கஷோகியைக் கொன்று தலை துண்டிக்க பட்டத்து இளவரசர் உத்தரவிட்டதாகவும் அமெரிக்க உளவுத்துறை நம்புகின்றன.
மரண தண்டனை குறித்து ஊடகத்திற்கு பேட்டியளித்த இளவரசர், ஒருவர் மற்றொரு நபரை கொன்றுவிட்டால், அந்த நபரின் குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகும் பட்சத்தில், குற்றவாளியை மன்னிப்பதாக கடிதம் தரும்வரை, மரண தண்டனை நிறைவேற்ற உரிமை உள்ளது. பலரின் உயிருக்கு யாராவது அச்சுறுத்தல் விடுத்தால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அதை மாற்றும் சக்தி என்னிடம் இல்லை என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.