அமெரிக்காவின் சியாட்டில் நகரில் 23 வயதான இந்திய மாணவி ஜாஹ்னவி கந்துலா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த போலீஸ் ரோந்து வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சியாட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் மாணவியின் மரணத்தை கேலி செய்தும் சிரித்தும் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ போலீஸ் அதிகாரியின் பாடி கேமராவில் பதிவாகியிருந்தது.
இந்நிலையில் போலீஸ் அதிகாரியின் செயலுக்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் அமெரிக்க அரசு இவ்விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது.
சியாட்டில் மற்றும் வாஷிங்டனில் உள்ள அதிகாரிகளிடம் தூதரகம் பிரச்சனையை தெரிவித்த நிலையில், இவ்விவகாரத்தை தீவிரமாக கண்காணிப்பதாகவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளது.
Police officer, captured on bodycam, who killed 23 yr old Jahnavi Kandula, disgustingly says:
— M9.NEWS (@M9Breaking) September 12, 2023
“She's just a regular person
Write a check for $11,000; she was 26 anyway, had limited value”
Sending our heartfelt prayers to her grieving family 🙏🙏
pic.twitter.com/6tjacXxvXC
இந்த ஆண்டு ஜனவரி 23-ம் தேதி போலீஸ் அதிகாரி கெவின் டேவ் என்பவர் அதி வேகமாக போலீஸ் வாகனத்தை ஓட்டி வந்ததில் வாகனம் மோதி ஜாஹ்னவி கந்துலா உயிரிழந்தார். டேவ் 74 மைல் வேகத்தில் (~ 119 kmph விட அதிகமாக ) வாகனத்தை ஓட்டி வந்ததில் மாணவி உயிரிழந்தார். டேவ் போதையில் வாகனம் ஓட்டினாரா என்பதை கண்டறியவும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாகவும், போதைப்பொருள் அங்கீகார நிபுணருமான டேனியல் ஆடரர் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டார்
டேனியல் ஆடரர் விசாரணைக்கு சென்ற போது உயிரிழந்த மாணவி பற்றி கேலி செய்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கந்துலாவின் வாழ்க்கை “limited value”. இவருக்கு ஒரு காசோலை எழுத வேண்டும். அவர் 26 வயதானவள். 11,000 டாலர் போதும் என்று கூறி சிரித்து கேலி செய்துள்ளார். இது அவரின் பாடி கேமராவில் பதிவாகியுள்ளது. காவல் துறையினர் திங்கட்கிழமை இந்த ஆடியோவை வெளியிட்டனர்.
ஜாஹ்னவி கந்துலா யார்?
ஜாஹ்னவி கந்துலா ஆந்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். சியாட்டிலில் உள்ள வடகிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பு படித்து வந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.