/tamil-ie/media/media_files/uploads/2022/10/south-kore.jpg)
இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.
சியோல் ஹாலோவீன் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் மரணம்
தென்கொரியாவின் சியோலில் ஹாலோவீன் விழா கொண்டாட்டத்தில் ஒரு குறுகிய சந்துக்குள் கூட்டம் அலைமோதியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 151 பேர் இறந்தனர் மற்றும் 82 பேர் காயமடைந்தனர். இது தென்கொரியாவின் மிக மோசமான நிகழ்வாக அமைந்துள்ளது.
சனிக்கிழமை இரவு தலைநகரின் ஓரு மாவட்டமான இட்டாவோனில் கூட்ட நெரிசலில் சிக்கிய பின்னர் தெருக்களில் கிடந்த மக்களை அவசரகால பணியாளர்கள் மற்றும் பாதசாரிகள் தீவிரமாக முதலுதவி செய்து காப்பாற்றினர்.
சியோலின் யோங்சன் தீயணைப்புத் துறையின் தலைவர் சொய் சியோங் பியோம் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் காயமடைந்தவர்களில் குறிப்பிடப்படாத எண்ணிக்கை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறினார்.
தொற்றுநோய் கட்டுப்பாட்டுகளுக்குப் பிறகு நாட்டின் மிகப்பெரிய வெளிப்புற ஹாலோவீன் விழாக்களுக்காக 100,000 பேர் இட்டாவோனில் கூடியிருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சியோல் ஹாலோவீன் விழாவில் உயிரிழந்தவர்களுக்கு ஜெய்சங்கர் இரங்கல்
சியோல் ஹாலோவீன் பார்ட்டி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளார். இட்டாவோனில் சனிக்கிழமை பதிவான சம்பவத்தில் குறைந்தது 151 பேர் இறந்தனர் மற்றும் 82 பேர் காயமடைந்தனர்.
Deeply shocked at the loss of so many young lives due to the stampede in Seoul. Our condolences to the families of those who lost their dear ones. We stand in solidarity with the Republic of Korea during this difficult time.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) October 30, 2022
தென் கொரியாவுடன் இந்தியாவின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, “சியோலில் கூட்ட நெரிசலால் பல இளைஞர்களின் உயிர்களை இழந்ததில் ஆழ்ந்த அதிர்ச்சி. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த இக்கட்டான நேரத்தில் கொரியா குடியரசுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்,” என ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார்.
சோமாலியா குண்டுவெடிப்பில் 100 பேர் மரணம்
சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள கல்வி அமைச்சகத்திற்கு வெளியே சனிக்கிழமையன்று இரண்டு கார் வெடிகுண்டு வெடிப்புகளில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300 பேர் காயமடைந்தனர் என்று நாட்டின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஹசன் ஷேக் முகமது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கல்வி அமைச்சகம் மற்றும் பள்ளியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவான அல்-ஷபாப் பொறுப்பேற்றுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
"பிற்பகல் 2:00 மணியளவில், அல்-ஷபாப் பயங்கரவாதிகள் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட பொதுமக்களை குறிவைத்து இரண்டு குண்டுவெடிப்புகளை நடத்தினர்" என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் சாதிக் டூடிஷே கூறினார்.
டெல்லி ஐ.நா பிரகடனம்
ட்ரோன்கள் மூலம் அச்சுறுத்தல், கிரிப்டோகரன்சி மூலம் பயங்கரவாத நிதியுதவி மற்றும் பயங்கரவாத அமைப்புகளால் இணையத்தைப் பயன்படுத்துவது ஆகியவை புதுதில்லியில் நடந்த ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்புக் குழு கூட்டத்தில் சனிக்கிழமை எழுப்பப்பட்ட முக்கிய கவலைகளில் ஒன்றாகும்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசுப் பிரதிநிதிகள் மற்றும் வல்லுநர்கள் பயங்கரவாதிகளால் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இரண்டு நாள் கூட்டத்தின் முடிவில், CTC இன் டெல்லி பிரகடனம் அச்சுறுத்தல்களைக் கவனத்தில் எடுத்து, அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தது.
இந்த பிரகடனம் "பயங்கரவாதம்... மேலும் பரவியுள்ளது... பயங்கரவாதிகளின் தழுவல் மற்றும் புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம்... தொழில்நுட்பத்தில் கண்டுபிடிப்புகள் குறிப்பிடத்தக்க பயங்கரவாத எதிர்ப்பு வாய்ப்புகளை வழங்கக்கூடும் என்பதை அங்கீகரிக்கும் வகையில் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது."
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.