Advertisment

சிறுபான்மையினர் மீது அடக்குமுறை, இனப்படுகொலை: வங்கதேச இடைக்கால அரசு மீது ஷேக் ஹசீனா முதல் முறை குற்றச்சாட்டு

நாட்டை விட்டு வெளியேறிய பிறகு தனது முதல் பொது உரையில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இடைக்கால அரசாங்கத் தலைவர் மீது கடுமையாக குற்றஞ்சாட்டினார்.

author-image
WebDesk
New Update
Bang  Hasina

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு முதல் முறையாக வங்கதேச இடைக்கால அரசாங்கத் தலைவர் முகமது யூனுஸ் மீது கடுமையாக குற்றஞ்சாட்டினார். 

Advertisment

ஆகஸ்ட் மாதம் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிய பிறகு தனது முதல் பொது உரையில் முகமது யூனுஸ் நாட்டில் "இனப்படுகொலையை" தூண்டுவதாகவும் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரைப் பாதுகாக்கத் தவறியதாகவும் குற்றம் சாட்டினார்.

மாணவர் குழுக்களால் நடத்தப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் இந்தியாவில் ஹசீனா தஞ்சம் புகுந்தார். இதன் பின் தனது அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு ஆன்லைனில் உரையாற்றினார். 

வங்கதேசத்தின் 1971 விடுதலைப் போரில் பாகிஸ்தான் படைகளின் தோல்வியைக் குறிக்கும் "பிஜோய் டிபோஸ்" அல்லது வெற்றி தினத்தை அனுசரிக்க ஞாயிற்றுக்கிழமை நியூயார்க்கில் நடந்த நினைவேந்தல் நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த உரை இருந்தது. 

Advertisment
Advertisement

அவர் பேசுகையில்,  “இன்று, நான் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறேன். உண்மையில் யூனுஸ் இனப்படுகொலையில் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட விதத்தில் ஈடுபட்டுள்ளார். 

இந்த இனப்படுகொலையின் பின்னணியில் மாணவர் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் யூனுஸ் ஆகியோர் உள்ளனர்” என்று அவர் கூறினார்.

1975-ல் அவர்களின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டதைப் போல, தன்னையும் தனது சகோதரி ஷேக் ரெஹானாவையும் படுகொலை செய்யத் திட்டமிடப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஆங்கிலத்தில் படிக்க:   ‘What is this persecution of minorities for?’: In 1st public address, former PM Sheikh Hasina accuses Muhammad Yunus of genocide in Bangladesh

“பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தால் பல உயிர்கள் பலியாகியிருக்கும். இது 25-30 நிமிடங்கள் ஆகும், நான் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என்ன நடந்தாலும் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டாம் என்று நான் அவர்களிடம் [பாதுகாவலர்களிடம்] கூறினேன்,” என்று அவர் ஆகஸ்ட் 5 அன்று டாக்காவில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லம் தாக்கப்பட்டது குறித்து பேசினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment