ஒற்றைக் காலில் 10 நொடி நின்று பாருங்க… முடியாவிட்டால் மரணம் நெருங்குது… ஷாக் ஆய்வு!

கைரேகைகளை வைத்து ஆயுள் ரேகை சொல்கிற ஜோசியத்தைக் அனைவரும் கேள்விப்பட்டிருக்கலாம். மாறாக, உங்கள் கால் வலிமையை வைத்து ஆரோக்கியத்தையும் ஆயுளையும் கூறும் ஆய்வு வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது.

கைரேகைகளை வைத்து ஆயுள் ரேகை சொல்கிற ஜோசியத்தைக் அனைவரும் கேள்விப்பட்டிருக்கலாம். மாறாக, உங்கள் கால் வலிமையை வைத்து ஆரோக்கியத்தையும் ஆயுளையும் கூறும் ஆய்வு வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது. ஒற்றைக் காலில் 10 நொடி நின்று பாருங்கள், நிற்க முடியாவிட்டால் மரணம் நெருங்குகிறது என்று ஒரு ஆய்வு அதிர்ச்சி அளித்துள்ளது.

இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த சர்வதேச நிபுணர்கள் இறப்பு மற்றும் சமநிலை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு பற்றிய ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர்.

கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆய்வு ரியோ டி ஜெனீரோவை சேர்ந்த டாக்டர் கிளாடியோ கில் அராவ்ஜோ தலைமையிலான ஆய்வாளர்கள் ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் 51 முதல் 75 வயது வரையிலான 1,702 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். 2020ம் ஆண்டு வரை, 12 ஆண்டுகள் ஆய்வு நடத்தப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன.
ஆய்வு முடிவில், முதியோர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சமநிலை பரிசோதனையும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.

நீங்கள் அது என்ன சமநிலை பரிசோதனை என்று கேட்கலாம். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் முதலில், அவர்களது ஒரு காலை மேலே தூக்குங்கள் என கூறப்பட்டு உள்ளது. அந்த காலை மற்றொரு காலின் கீழே, பின்பக்கத்தில் வைக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர். கைகள் இரண்டும், இரு பக்கங்களில் தளர்வாக விடப்பட்டு, நேராக பார்க்கும்படி அவர்களிடம் கூறியுள்ளனர். ஆய்வில் கலந்து கொண்டோருக்கு 3 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இந்த ஆய்வில் 5ல் ஒருவர் தோல்வி அடைந்து உள்ளார்கள்.

ஆய்வில் கலந்து கொண்டவர்களில் ஒற்றக்காலில் நிற்க முடியாமல் போனவர்கள் 123 பேர் அடுத்த 10 ஆண்டுகளில், பல்வேறு காரணங்களுக்காக உயிரிழந்து உள்ளனர். வயது, பாலினம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை பரிசீலித்ததன் அடிப்படையில், ஒரு காலில் 10 வினாடிகளுக்கு நிற்க முடியவில்லை என்றால், ஒரு தசாப்தத்தில் அவருக்கு மரணம் ஏற்பட கூடிய ஆபத்து 84 சதவீதம் உள்ளது என இந்த ஆய்வு அதிர்ச்சி முடிவை தெரிவித்துள்ளது. அதனால், உடலினை உறுத் செய்யுங்கள். உங்கள் கால்களை வலிமையாக்குங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: Shocking study result 10 seconds stand in single leg if cant death coming in decades