அமெரிக்காவில் உள்ள யுடியூப் தலைமை அலுவலகத்தில் தீடீரென்று நுழைந்த பெண் ஒருவர், துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் ப்ரூனோ பகுதியில் யுடியூப் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு யுடியூப் நிர்வாகத்தைச் சேர்ந்த பல்வேறு அதிகாரிகள் பணிப்புரிந்து வருகின்றன. இந்நிலையில், நேற்றைய தினம், இந்த அலுவலகத்திற்கு வந்த பெண் ஒருவர், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பெண் உட்பட, மூவர் காயமடைந்தனர். அதன் பின்பு அந்த பெண் தன்னையும் சூட்டுக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்பு, தற்கொலை செய்துக் கொண்ட பெண்ணின், மொபைலை எடுத்து சோதித்து பார்த்தனர். அதில், அந்த பெண் இறுதியாக அவரின் தோழியுடன் பேசியது தெரிய வந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
தற்கொலை கொண்ட பெண்ணின் பெயர் நசீம் அக்டம். 39 வயதான இவர், தனது காதலனை துப்பாக்கியில் சுட்டுக் கொலை செய்வதற்காக யுடியூப் அலுவலகத்திற்கு வந்துள்ளார். ஆனால், அந்த சமயத்தில் அவர் அங்கு இல்லாத காரணத்தினால் ஆத்திரத்தில் இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்டிருக்கிறார்.
தனது காதலுடன் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தான், இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இருப்பதாக கலிஃபோர்னியா மாகாண காவல் துறையினர், அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். யுடியூப் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து, கூகுள் நிறுவன தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
,
அதே போல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
,