Six Palestinian militants escape from high-security Israeli prison : அதிகபட்ச பாதுகாப்புடன் கூடிய இஸ்ரேலிய சிறைகளில் இருந்து ஹாலிவுட் பட பாணியில் 6 பாலஸ்தீனியர்கள் தப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாங்கள் தங்கியிருந்த சிறை அறைகளின் தளத்தில் துளையிட்டு அந்த சிறையில் இருந்து தப்பியுள்ளனர். இந்த நிகழ்வு பாலஸ்தீனியர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.
அதிகாலை வேளையில் தங்கள் வயல்களில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் நடமாடிக் கொண்டிருப்பதாக விவசாயிகள் சிலர் காவலர்களுக்கு தகவல்கள் அனுப்பினார்கள். இதனை தொடர்ந்து, வடக்கு இஸ்ரேல் பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கில்போவா சிறையில் உள்ள அதிகாரிகளிடம் தகவல்கள் தெரிவித்த நிலையில் சிறையில் இருந்து தப்பி ஓடியவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.
இவர்கள் தப்பிச் சென்றதை அறிந்த பிறகு, இதே போன்று பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அந்த சிறைகளில் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களில் ஈடுபட்ட பாலஸ்தீனியர்கள், பாலஸ்தீனிய குற்றவாளிகள் மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். தப்பியோடியவர்களில் ஐந்து பேர் இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் முக்கிய ஃபதா கட்சியுடன் தொடர்புடைய ஆயுதக் குழுவின் முன்னாள் தளபதி என்று சிறைச்சாலை தெரிவித்துள்ளது. இஸ்ரேலியர்களை கொன்ற தாக்குதல்களுக்கு திட்டம் தீட்டியது தொடர்பாக நான்கு பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தனர். மற்றொரு நபர் சிறப்பு உத்தரவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 6வது நபர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
பிரதமர் நஃப்தாலி பென்னட்டின் அலுவலகம், அவர் இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சருடன் பேசியதாகவும், தப்பி ஓடியவர்களைக் கண்டுபிடிக்க எல்லை வரை முயற்சிகள் தேவைப்படுகிறது என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தப்பியோடியவர்கள் மேற்கு கரையை அடைய முயற்சி செய்வார்கள் என்று காவல்துறை செய்தித்துறை தொடர்பாளர் கூறினார். மேற்கு கரையில் பாலஸ்தீன ஆணையம் வரையறுக்கப்பட்ட சுய ஆட்சியைப் பயன்படுத்துகிறது. அங்கிருந்து 9 மைல்களுக்கு அப்பால் ஜோர்டன் எல்லை அமைந்துள்ளது. காசாவில் இஸ்லாமிக் ஜிகாத் ஆதரவாளர்கள், சிறையில் இருந்து அவர்கள் தப்பியதை தொடர்ந்து சாலையில் சென்ற நபர்களுக்கு இனிப்புகள் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
இன்று, இஸ்லாமிய ஜிகாத் ஹீரோக்கள் கில்போவா சிறையில் புதிய வெற்றியை பெற்றுள்ளனர். இது ஆக்கிரமிப்பாளர்களின் பிம்பத்தை அடித்து நொறுக்கியுள்ளது என்றூ காசாவில் உள்ள இஸ்லாமிக் ஹிகாத் அதிகாரி கமீஸ் இல் ஹைத்தம் கூறியுள்ளார். இஸ்ரேலிய சிறைச்சாலை சேவையால் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ, கைதிகளின் கழிவறைக்கு அருகில் குழிகள் தோண்டியதை அதிகாரிகள் ஆய்வு செய்வதை காட்டியது.
1994 சிறை தப்பிக்கும் திரைப்படமான தி ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சனில் இருந்து காட்சிகளை சமூக ஊடகங்களில், பாலஸ்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் பகிர்ந்தனர். சிறைச்சாலை கட்டப்படும் போது உருவாக்கப்பட்ட பாதைகளை பயன்படுத்தி சிறைச்சாலைகளில் இருந்து அவர்கள் தப்பிச் சென்றதாக சிறைச்சேவையின் வடக்கு தளபதி ஆரிக் யாக்கோவ் தெரிவித்தார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் எல்லையிலிருந்து சுமார் 4 கிமீ (2 மைல்) தொலைவில் உள்ள இந்த சிறை இஸ்ரேலின் மிக உயர்ந்த பாதுகாப்பு சிறைகளில் ஒன்றாகும். தப்பித்து சென்ற ஒரு நபர்களில் ஒருவரை சிறை அதிகாரி அடையாளம் கண்டுள்ளார். அவர் ஜகாரியா ஜுபெய்தி ஆவார். மேற்கு கடற்கரை நகரமான ஜெனின் நகரில் செயல்பட்டு வரும் ஃபட்டா அல் அக்ஸா தியாகிகள் பிரிகேட்ஸின் தளபதி ஆவார். இவருக்கு ஏற்கனவே ஒரு முறை இஸ்ரேல் மன்னிப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.