Smriti Mandhana : இந்திய மகளின் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிர்தி மந்தனா நேற்று மகளிர் சேலஞ்ச டி20 போட்டியில் ஆடிய அதிரடி ஆட்டம் பற்றிய பேச்சு தான் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில்.
லேடி கோலி.. மந்தனாவிற்கு கிரிக்கெட் ரசிகர்கள் வைத்த செல்லப்பெயர் இது. 22 வயதாகும் மந்தனாவிற்கு கிரிக்கெட்டில் பெண் ரசிகர்களை விட ஆண் ரசிகர்களே ஏராளம். இவரின் ஆட்டத்தை கண்டு வியந்து பாராட்டாத முன்னணி கிரிக்கெட் வீரர்களே இல்லை எனலாம். 40 போட்டிகளில் 826 ரன்கள் குவித்துள்ள மந்தனா, ஐபிஎல் போன்று, இங்கிலாந்தில் நடைப்பெறும் பெண்களுக்கான டி20 போட்டி தொடரில் பங்கேற்க ஒப்பந்தமாகினார்.
மூன்று அணிகள் கொண்ட போட்டி மகளிர் சேலஞ்ச் டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. டிரெய்ல்பிளாசர்ஸ் , சூப்பர் நோவாஸ் , வெலாசிட்டி என 3 அணிகள் பங்கேற்றுள்ளனர்.டிரெய்ல்பிளாசர்ஸ் அணியின் கேப்டனாக மந்தனா அறிவிக்கப்பட்டார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தொடரின் நேற்றைய போட்டியில் டிரெய்ல்பிளாசர்ஸ் அணி, சூப்பர்நோவாஸ் அணியுடன் மோதியது. முதலில் ஆடிய டிரெய்ல்பிளாசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் சேர்த்தது. கேப்டன் மந்தனா 67 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்ஸர் என மொத்தம் 90 ரன்கள் விளாசினார். மந்தனாவின் இந்த அதிரடி பேட்டிங் அரங்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.
141 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர்நோவாஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மந்தனா ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.அந்த அணியின் வெற்றிக்கு காரணமான மந்தனாவிற்கு பாராட்டுக்கள் குவிந்தன.
மேலும், நேற்று இரவு முதல் அவரின் பெயர் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டின்கில் இருந்து வருகிறது. ஏற்கனவே இளைஞர்கள் சோஷியல் மீடியாவிக்ல் மந்தனாவின் க்யூட் புகைப்படங்கள் பலவற்றை அதிகளவில் பகிர்ந்து வந்தனர். இளைஞர்களின் ஃபேவரைட் இந்திய வுமன் கிரிக்கெட்டர் மந்தனாவின் நேற்றைய அதிரடி ஆட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.