என்ன ஒரு துணிச்சல்! இதுக்குல ஒரு மனசு வேண்டும்.. பீர் டின்னில் மாட்டிக் கொண்ட பாம்பை காப்பாற்றிய பெண்!

இந்த பெண் எந்த ரகம் என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்

By: Updated: April 3, 2019, 01:24:51 PM

snake viral video : அமெரிக்காவில் பீர் டின்னில் மாட்டிக் கொண்ட பாம்பினை பெண் ஒருவர் துணிச்சலாக காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.’

பாம்பு என்றால் படையும் நடுங்கும். பேய்க்கு பயப்படாதவர்கள் கூட பாம்புக்கு அஞ்சுவார்கள். ஆனால் இன்னும் சிலருக்கு பாம்பு என்றால் அலாதி பிரியம். மலைப்பாம்பில் தொடங்கி ராஜ நாகங்கள் என அனைத்து வகையான பாம்புகளையும் அன்புடன் வளர்க்கும் மனிதர்களையும் நாம் கேள்விப்பட்டுள்ளோம்.

இதில் இந்த பெண் எந்த ரகம் என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்..பாம்பை பார்த்து பயந்து ஓடுபவர்கள் மத்தியில் பாம்புக்கு ஒரு பிரச்சனை என்றதும் முதல் நபராக சென்றுள்ளார் இந்த பெண்.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில், சாலையோரம் கிடந்த பீர் டின்னுக்குள் பாம்பு ஒன்று மாட்டிக் கொண்டது. பீர் டின்னுக்குள் அந்த பாம்பின் தலை மாட்டிக் கொண்டதால் அந்த பாம்பு வெளியில் வர முடியாமல் நீண்ட நேரமாக துடித்தது. அப்போது அந்த வழியாக சென்ற பெண் இந்த காட்சியை கண்டார். உடனே ஓடிச் சென்று பாம்புக்கு உதவினார்.

நீண்ட நேரத்திற்கு பிறகு, ஒரு குச்சியின் துணையுடன் பாம்பை காப்பாற்றினார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பாம்பை கண்டு பயப்படாமல் அதற்கு உதவிய நல்ல மனசு படைத்த பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Snake viral video florida woman rescues snake stuck in a beer can

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X