New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/03/Untitled-29.jpg)
இரண்டாம் நிலை பரவல் தொடங்கினால் நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என எச்சரிக்கை
Social distance should be followed till 2022 says Harvard University researchers : கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது.இந்நோய்க்கு இது வரை மருந்து ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை. சமூக விலகல் மட்டுமே இந்நோய் பரவலில் இருந்து மக்களை காக்கும் கருவியாக உள்ளது.கொரொனா வைரஸ்க்கு தடுப்பூசிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் பொதுமக்கள் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய தேவை உருவாகியுள்ளது.
மேலும் படிக்க : வயிறு பசிக்குதே! கொரோனாவால் வேலை இழந்த நபர் ஏ.டி.எம். மெஷினை உடைத்து திருட முயற்சி
இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் தொற்று நோய்ப் பிரிவு பேராசிரியர் மார்க் லிப்சிட்ச் கொரொனா வைரசை கட்டுபடுத்த 2022 ஆண்டு வரை பொது மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம் என அறிவித்துள்ளார்.நோய் இரண்டாம் கட்டத்துக்கு சென்றால் பரவும் வேகம் அதிகரிக்க கூடும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
நோய் தொற்று உள்ளவர்களிடம் இருந்து பரவுவது ஒரு வகை. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களிடம் தாக்குவது மற்றொரு வகை. இந்நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும். அது தற்போது சாத்தியம் ஆகாது என்ற நிலை வந்தால் நிச்சயமாக 2022ம் ஆண்டு வரை மக்கள் சமூக விலகலை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க : வயிறு பசிக்குதே! கொரோனாவால் வேலை இழந்த நபர் ஏ.டி.எம். மெஷினை உடைத்து திருட முயற்சி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.