அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் விபத்துக்குள்ளான கார் ஒன்று, கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் சிக்கிக்கொண்டது.
ஆரஞ்சு கவுண்டி என்ற பகுதியில் நேற்று அதிகாலையில் இச்சம்பவம் நடைபெற்றது. அதிவேகத்தில் வந்த வெள்ளை நிற செடான் கார், செண்டர் மீடியனில் இடித்து விபத்துக்குள்ளாகி தூக்கி வீசப்பட்டது. தூக்கி வீசப்பட்ட கார், அங்கிருந்த கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது. எனினும், கார் ஓட்டுநர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
இதையடுத்து, காவல் துறை அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு வந்து காரை மீட்டனர்.