இலங்கை இறுதிப் போரில் காணாமல் போனவர்களை கண்டறிய குழு!

The Office of Missing Persons என பெயரிடப்பட்டுள்ள இந்த குழு, அடுத்த 3 ஆண்டுகளுக்கு தனது பணியினை செய்யும்.

இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் காணாமல் போனவர்களின் நிலையை அறிந்துகொள்ள 7 பேர் கொண்ட குழுவை இலங்கை அரசு அமைத்துள்ளது. இலங்கை அதிபர் மைத்திரிபால சிரிசேனா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆபீஸ் ஆப் மிஸ்ஸிங் பெர்சன் (The Office of Missing Persons) என பெயரிடப்பட்டுள்ள இந்த குழு, அடுத்த 3 ஆண்டுகளுக்கு தனது பணியினை செய்யும்.

இதன் தலைவராக சலியா பெரிஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்தக் குழுவில் இரண்டு தமிழர்களும், ஒரு இஸ்லாமியரும் இடம்பெற்றுள்ளனர்.

தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்த குழு, இலங்கை நாடாளுமன்ற நிலை குழுவிற்கு காணாமல் போனவர்களின் நிலை மற்றும் அவர்களின் குடும்பங்களின் நிலை ஆகியவற்றை அளிக்கும்.

இந்த குழுவிற்கு 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசால் 2013 ல் அமைக்கப்பட்ட குழுவானது 25,000 பொதுமக்களும், 5000 ராணுவ வீரர்களும் காணாமல் போயிருப்பதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close