Advertisment

இலங்கையில் சிங்கள, தமிழ் புத்தாண்டு தேதியைக் குறிப்பதில் மாறுபட்ட கருத்து; ஜோதிடர்கள் சர்ச்சை!

புத்தாண்டு சுப நேரக் குழுவின் பேச்சாளர் ஆனந்த சேனவிரத்னா கூறுகையில், “நாங்கள் மிகவும் ஆழமாக விவாதித்தோம். பல ஆலோசனைகளுக்குப் பின்னர் பெரும்பான்மை தீர்மானத்தின் மூலம் சுப நேரத்தை இறுதி செய்தோம்” என தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Sri Lanka flag

சிங்கள, தமிழ் புத்தாண்டின் சரியான தேதியைக் குறிப்பதில் இலங்கை அரசு அமைத்த ஜோதிடர்கள் குழுவினர் இடையே பிளவு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சிங்கள, தமிழ் புத்தாண்டு கொண்டாடுவதற்கான சரியான தேதியைக் குறிப்பதில் இலங்கை அரசு ஆதரவு ஜோதிடர்கள் இடையே பிளவு ஏற்பட்டு சர்ச்சையாகி உள்ளது.

Advertisment

இலங்கை கலாசார அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட  42 பேர் கொண்ட ஜோதிடர்கள் குழு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான சிறந்த தேதியை தீர்மானிப்பதில் முதன்முறையாக வேறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து பிளவுபட்டுள்ளனர்.

இலங்கை அரசு ஆதரவு பாரம்பரிய ஜோதிடர்கள் சிங்கள, தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட தேதியைக் குறிப்பிடுவதில் ஒருமனதாக ஒப்புக் கொள்ளத் தவறிவிட்டனர். மேலும், பேரழிவு பற்றி எச்சரிக்கும் ஜோதிடர்கள், நட்சத்திரங்களின் நிலையை தவறாகப் புரிந்துகொள்வதாக போட்டியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இலங்கையில் ஜோதிடர்கள் பௌத்த மற்றும் இந்து சமூகத்தினரால் ஜாதகம் மற்றும் எதிர்காலம் குறித்து ஆலோசிக்கப்படும் பெரும் செல்வாக்கு மிக்க நபர்கள். அவர்கள் குறித்துக் கொடுக்கும் நல்ல தேதிகளில்தான் திருமணம் முதல் வணிக ஒப்பந்தங்கள், நாட்டின் தேர்தல் வரை அனைத்தையும் வழிநடத்துகின்றன.

ஆனால், இலங்கை கலாசார அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட  42 பேர் கொண்ட ஜோதிடர்கள் குழு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான சிறந்த தேதியை தீர்மானிப்பதில் முதன்முறையாக வேறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து பிளவுபட்டுள்ளனர்.

இது குறித்து புத்தாண்டு சுப நேரக் குழுவின் பேச்சாளர் ஆனந்த சேனவிரத்னா கூறுகையில்,  “நாங்கள் மிகவும் ஆழமாக விவாதித்தோம். பல ஆலோசனைகளுக்குப் பின்னர் பெரும்பான்மை தீர்மானத்தின் மூலம் சுப நேரத்தை இறுதி செய்தோம்” என தெரிவித்தார். பெரும்பான்மையானவர்கள் பாரம்பரிய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தேதியை ஏப்ரல் 13 ஆம் தேதி இரவு என்று குறிப்பிட்டனர்.

ஆனால், இது குறித்து கருத்து வேறுபாடு கொண்ட ரொஷான் சானகா, இந்த நேரம் தவறானது என்றும், நாட்டை பேரழிவிற்கு இட்டுச் செல்லும் என்றும் கூறினார். அதிகாரப்பூர்வமாக இந்த நேரம் பின்பற்றப்பட்டால், இலங்கை தீயில் எரியும் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறது. பொருளாதார நெருக்கடியால் அங்கே ஆட்சியாளர்களுக்கு எதிராக பல மாதங்கள் நடந்த போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இந்த போராட்டம் ஜூலை 2022-ல் அப்போதைய இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டது. அவருக்குப் பின் வந்த அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்னர், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச தனது தனிப்பட்ட ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் ஜனவரி 2015-ல் ஒரு திடீர் தேர்தலை அறிவித்தார். ஆனால், அந்த தேர்தலில் தோல்வியடைந்தார். 

இலங்கையில் சிங்கள, தமிழ் புத்தாண்டு தேதியைக் குறிப்பதில் ஜோதிடர்களின் மாறுபட்ட கருத்தால் சர்ச்சை ஏற்படுவது இது முதன்முறையல்ல. 2022-ம் ஆண்டு இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், கொழும்புவில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக அதிபர் செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் பால் பொங்கும் ஆர்ப்பட்டம் நடைபெற்றது. 

இப்படியான பின்னணியில்தான், இலங்கையில், சிங்கள, தமிழ் புத்தாண்டு தேதியைக் குறிப்பதில் இலங்கை அரசு ஆதரவு ஜோதிடர்கள் இடையே இந்த ஆண்டும் பிளவு ஏற்பட்டு சர்ச்சையாகி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sri Lanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment