Sri Lanka Blast: இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரண்டு தேவாலயங்களில் குண்டு வெடித்தது.
ஈஸ்டர் சண்டேவான அன்று மக்கள் பெருமளவில் அந்த தேவாலயங்களுக்கு வருகை புரிந்திருந்தனர். அங்கு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தால், 253 மக்கள் உயிழந்திருக்கிறார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இலங்கை அரசு.
இந்நிலையில் 3 பெண்களுடன் கூடிய 6 பேரின் புகைப்படங்களை வெளியிட்டு, குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் என இலங்கை அரசு தெரிவித்தது.
அதில் ஒருவர் மேரி லாண்டைச் சேர்ந்த அமரா மஜித். அவர் அப்துல் கேடர் ஃபாத்திமா கதியா எனும் தீவிரவாதப் பெண் என அடையாளப் படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மஜித் தனது ட்விட்டரில், “ஈஸ்டர் அட்டாக்கோடு தொடர்புடைய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவள் என, இலங்கை அரசால் இன்று காலையில் நான் தவறாக அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
“இது முற்றிலும் தவறான ஒன்று. ஏற்கனவே எங்கள் சமூகம் நிறைய கண்காணிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. தயவு செய்து இந்த கொடூர தாக்குதலில் என்னை தொடர்பு படுத்துவதை நிறுத்துங்கள். அடுத்தமுறையாவது இப்படியான விஷயங்களை வெளியிடுவதற்கு முன்னர் மிகுந்த கவனத்துடன் இருங்கள். உங்களின் கவனமற்ற செயலால் ஒருவரின் குடும்பமும், சமூகமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது” எனவு அமரா மஜித் ட்வீட் செய்திருந்தார்.
குற்றவியல் மற்றும் புலனாய்வு துறையின் (சிஐடி) விளக்கத்தைக் கேட்டு பின்னர், திருத்தம் செய்யப்பட்ட பட்டியலை வெளியிட்டது இலங்கை காவல் துறை.
”அப்துல் கேடர் ஃபாத்திமா கதியா என அடையாளப் படுத்தப்பட்டிருப்பவர் உண்மையில் அவரில்லை. ஆனால் இந்த பெயர் சிஐடி-யா சந்தேகிக்கப்படும் நபரின் சரியானப் பெயர்” என திருத்தம் செய்யப்பட்டு பின்னர் வெளியிடப்பட்டது.