Advertisment

Sri Lanka Bomb Blast: கொழும்பு செல்லும் தேசிய புலனாய்வு குழு

இத்தாக்குதல்களுக்கு பின்னால் தேசிய தவுஹித் ஜமாத் இருக்கலாம் என்று இலங்கை அதிகாரிகள் நம்புகின்றனர். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Srilanka Church Bomb Blast

Srilanka Church Bomb Blast

Sri Lanka Bomb Blast: கடந்த ஞாயிற்றுக் கிழமை இலங்கையில் இரண்டு தேவாலயங்களில் குண்டு வெடித்தது.

Advertisment

ஈஸ்டர் சண்டேவான அன்று பெரும்பாலான மக்கள் தேவாலயங்களுக்கு வருகை புரிந்தனர். அப்போது நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவின் கரையோரப் பகுதிகள் தாக்கப்படுவதால், இது நாட்டிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என தேசிய புலனாய்வுத் துறை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

”நாங்கள் இலங்கைக்கு சென்று இந்தத் தீவிரவாத தாக்குதலைப் பற்றி ஆராய விரும்புகிறோம். இப்படியான தாக்குதல் இதுவரை துணை கண்டத்தில் நடந்ததே இல்லை. எல்.டி.டி.இ-யின் வீழ்ச்சிக்குப் பிறகு இலங்கை எந்தவொரு பெரிய தாக்குதலையும் சந்திக்கவில்லை. இது இந்தியாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், ஒரு புதிய சக்தியின் தோற்றத்தை நமக்கு சுட்டிக்காட்டுகிறது” என்கிறார் என்.ஐ.ஏ-யின் (National Investigation Agency) அதிகாரி ஒருவர்.

வெளிநாடுகளின் உதவி மற்றும் தளவாட பயிற்சிகள் இல்லாமல் இப்படியான ஒரு தாக்குதலை நிகழ்த்தியிருக்க முடியாதென இந்தியா நம்புவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதல்களுக்கு பின்னால் தேசிய தவுஹித் ஜமாத் இருக்கலாம் என்று இலங்கை அதிகாரிகள் நம்புகின்றனர்.

2014 ஆம் ஆண்டில், அமெரிக்க தூதரகத்தைத் தாக்க திட்டமிட்டிருந்த, இலங்கையைச் சேர்ந்த இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

ஏப்ரலில் சகிர் ஹுசைன் என்பவர், மாலத்தீவு நாட்டினரின் உதவியுடன் சென்னையிலுள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தூதரகங்களை தாக்க பாகிஸ்தானுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டியதற்காக கைது செய்யப்பட்டார்.

ஒரு மாதம் கழித்து, அவரது கூட்டாளின் சுலைமான், இதே விஷயத்திற்காக மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.

இருவருமே பாகிஸ்தானுக்காக இலங்கையிலிருந்து வேலைப் பார்த்தவர்கள், என்கிறது என்.ஐ.ஏ

 

Srilanka Bomb Blast
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment