Advertisment

Sri Lanka Church Bomb Blast: 'தொடர் குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் பலி' - மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

Sri Lanka Church Bomb Blast on Sunday Easter : புனித ஞாயிறு திருநாளுக்காக தேவாலயத்தில் பக்தர்கள் கூடியிருந்த வேலையில் இந்த குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sri Lanka Church Bomb Blast Live Updates

Sri Lanka Church Bomb Blast Live Updates

Sri Lanka Church Bomb Blast: இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள இரண்டு தேவாலயங்களில் குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளது. கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள அந்தோணியார் தேவாலயத்திலும், நீர்கொழும்புவில் கத்துவப்பட்டியா செபஸ்டியர் தேவாலயத்திலும் ஒரே நேரத்தில் குண்டு வெடிப்பு.

Advertisment

இன்று புனித ஞாயிறு திருநாளுக்காக தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்த நேரத்தில் இந்த குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளது. நான்கு தேவாலயங்கள் உட்பட மொத்தம் ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு. மக்களை பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் அந்நாட்டின் பாதுகாப்பு படையினர்.

Live Blog

இது தொடர்பான முழுமையான தகவல்களுக்கு இணைந்திருங்கள் தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்துடன்














Highlights

    20:26 (IST)21 Apr 2019

    3 இந்தியர்கள் பலி

    இலங்கையில் 8 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு

    - லோகாஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகிய 3 இந்தியர்கள் உயிரிழந்ததாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்வீட்

    18:42 (IST)21 Apr 2019

    யார் சூழ்ச்சி இது?

    இலங்கை மக்கள் வதந்திகளை நம்பவேண்டாம். அமைதி காக்குமாறு அதிபர் சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். குண்டு வெடிப்புக்கான பின்னணியை கண்டறிய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி என்ன என்பது பற்றி துரித விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு ஒட்டுமொத்த மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இலங்கை அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    18:02 (IST)21 Apr 2019

    ரஜினிகாந்த் வேதனை

    'ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கையில் நடந்த இந்த துயரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை' என ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

    17:58 (IST)21 Apr 2019

    பலி எண்ணிக்கை 207

    இலங்கையில் இன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 207 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூகத் தளங்களை இலங்கை அரசு முடக்கியுள்ளது. வதந்திகள் பரவாமல் இருக்க இந்நடவடிக்கை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

    16:56 (IST)21 Apr 2019

    உதவி எண்கள் அறிவித்த இந்திய தூதரகம்

    இலங்கை குண்டு வெடிப்பு : உதவி எண்களை அறிவித்தது இந்திய தூதரகம் - 947779-03082, 94112-422788, 94112-422789.

    16:42 (IST)21 Apr 2019

    விராட் கோலி வேதனை

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டரில், "இலங்கையில் இருந்து வெளிவரும் செய்திகளை கேட்கையில் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. தாக்குதலுக்கு ஆளானவர்களுக்காக நான் வேண்டிக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    15:42 (IST)21 Apr 2019

    முக ஸ்டாலின் கண்டனம்

    திமுக தலைவர் முக ஸ்டாலின் தன்னுடைய கண்டனங்களை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் 

    14:44 (IST)21 Apr 2019

    இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

    இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, வழிப்பாடுத் தலங்கள், மத தலைவர்கள் வசிக்கும் இடங்களுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்க உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது.

    14:40 (IST)21 Apr 2019

    Sri Lanka Church Bomb Blast LIVE Updates : இலங்கை தலைநகரில் மீண்டும் குண்டு வெடிப்பு

    இன்று காலை வரை 6 இடங்களில் மட்டுமே குண்டு வெடிப்பு நிகழ்ந்த நிலையில், ஏழாவதாக மீண்டும்  கொழும்புவில் குண்டுவெடிப்பு. தற்போது நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 2 நபர்கள் பலி

    13:13 (IST)21 Apr 2019

    மோடி கண்டனம்

    இலங்கையில் நடந்த தாக்குதல்  குறித்து உலக தலைவர்கள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். தற்போது பிரதமர் மோடி தன்னுடைய கண்டனத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்  அறிவித்துள்ளார். இலங்கை மக்களின் இழப்பிலும் துயரிலும் இந்தியா பங்கேற்கிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்க்கொள்கின்றேன் என்று ட்வீட் செய்துள்ளார்  

    13:03 (IST)21 Apr 2019

    இலங்கையில் நடிகை ராதிகா தங்கியிருந்த விடுதியில் குண்டு வெடிப்பு

    இலங்கை சென்ற நடிகை ராதிகா அங்கிருக்கும் சின்னமன்கிராண்ட் என்ற ஹோட்டலில் தங்கியுள்ளார். அங்கிருந்து வெளியேறிய சில மணி நேரங்களில் வெடி குண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறித்து தன்னுடைய ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். 

    12:05 (IST)21 Apr 2019

    Sri Lanka Church Bomb Blast LIVE Updates : உயிர் இழந்தோரின் எண்ணிக்கை அறிவிப்பு

    6 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றதை தொடர்ந்து 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    11:07 (IST)21 Apr 2019

    கொழும்புவில் வசிக்கும் இந்தியர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ள உதவி எண்கள் அறிவிப்பு

    இலங்கையில் இன்று நடைபெற்ற தாக்குதல் குறித்தும், உங்கள் உறவினர்கள் குறித்த உடனடியான தகவல்களைப் பெற இந்த எண்களை தொடர்பு கொள்ளவும் என்று இந்திய ஹை கமிஷன் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளம் எண்களை அறிவித்துள்ளது. 

    11:02 (IST)21 Apr 2019

    பலி எண்ணிக்கை உயர்வு

    தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த தாக்குதலில் இதுவரை 30க்கும் மேற்ப்பட்டோர் பலியாகியுள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    10:58 (IST)21 Apr 2019

    srilanka church bomb blasts updates : இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் குறித்து சுஷ்மா ஸ்வராஜ்

    இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ”கொழும்புவில் இருக்கும் இந்தியாவின் ஹை கமிஷ்னரிடம் இருந்து தகவல்களை பெற்று வருகின்றோம். இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழல் குறித்து ஆராய்ந்து வருகின்றோம்” என்று கூறியுள்ளார்.

    10:34 (IST)21 Apr 2019

    தாக்குதலுக்கு பின்பு - வீடியோ

    தேவாலயத்தில் இருந்து வெளியேறிய மக்கள் அங்கு நிலவி வரும் நிலைமையை வீடியோவாக படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். 

    10:33 (IST)21 Apr 2019

    புனித அந்தோணியர் தேவாலயம்

    புனித அந்தோணியர் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இடர்பட்ட இடத்தில் இருந்து வெளியேறிய மக்கள் 

    10:29 (IST)21 Apr 2019

    150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்

    தாக்குதலில் 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    #EasterSundayAttacksLK Multiple explosions in churches and hotels today; nearly 150 admitted to hospitals. #lka

    10:27 (IST)21 Apr 2019

    பலி எண்ணிக்கை அறிவிப்பு `

    6 இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 25 பேர்  பலியாகியுள்ளனர். தாக்குதல் நடைபெற்ற இடங்களில் நேரில் வந்து மேற்பார்வையிட உள்ளார் அந்நாட்டின் அதிபர் மைத்ரிபால சிறிசேன

    10:26 (IST)21 Apr 2019

    கொழும்புவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு

    நான்கு தேவாலயங்கள் மற்றும் இரண்டு நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டு வெடித்துள்ளது. கொழும்புவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    10:22 (IST)21 Apr 2019

    srilanka church bomb blasts updates : உள்நாட்டு போருக்கு பின்பு மிகப் பெரிய தாக்குதல்

    2009ம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போருக்கு பின்னால் நடைபெற்றுள்ள மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும். தேவாலயங்களில், குறிப்பாக தலைநகரில் இதற்கு முன்பு வரை இது போன்ற வெடி குண்டு தாக்குதல் நடைபெற்றதில்லை என்று கூறப்படுகிறது.

    பாதுகாப்பு படையினர், தாக்குதலுக்கு உட்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க உதவி வருகின்றனர்.  தேவாலயம் மட்டுமின்றி சங்கரி லா ஹோட்டல் மற்றும் சின்னமன் கிராண்ட் ஹோட்டல் மற்றும் மட்டக்கலப்பு பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்திலும் தொடர் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.
    Srilanka
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment