இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண குழு – ரணில் அறிவிப்பு
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களை இலங்கை சமூகத்துடன் இணைப்பதற்கான வழிகளைக் கண்டறிய குழுவொன்றை நியமிப்பதாக அறிவித்துள்ள நிலையில், நாட்டில் தமிழ் இன மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு படிப்படியாகத் தீர்வு காணப்படும் என நம்புவதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணத்தில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி அரசியல் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் (CWC) வேண்டுகோளின் பேரில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தால் வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்வின் போது ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் ரணில் விக்கிரமசிங்கவின் இந்த கருத்துக்கள் வந்தன.
மலைநாட்டுத் தமிழர்களில் சிலர் இலங்கை சமூகத்தில் வெற்றிகரமாக ஒன்றிணைந்துள்ள நிலையில், சிலர் தோல்வியடைந்துள்ளனர், அவர்களுக்கு உதவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
மலையக வம்சாவளி தமிழர்களை இலங்கை சமூகத்துடன் எவ்வாறு இணைத்துக்கொள்வது என்பது குறித்து ஆராய்வதற்காக அரசாங்கம் குழுவொன்றை நியமிக்கும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையின் முழு இனப்பிரச்சினைக்கும் அரசாங்கம் தீர்வு காண்பதால், எதிர்வரும் ஆண்டுகளில் இந்தப் பிரச்சினைகள் படிப்படியாகத் தீர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மோர்பி பாலம் விபத்து; இரங்கல் தெரிவித்த ஐ.நா பொதுச்செயலாளர்
ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், குஜராத்தின் மோர்பி நகரில் பாலம் இடிந்து விழுந்தது குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
"குஜராத் மாநிலத்தில் மோர்பி பாலம் இடிந்து விழுந்த துயரச் செய்தியால் பொதுச்செயலாளர் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளார்" என்று பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், இந்திய மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் தனது இரங்கலைத் தெரிவித்த அண்டோனியா குட்டரெஸ், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் பாலம் விபத்து; பிடன், கமலா ஹாரிஸ் இரங்கல்
குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் திங்கள்கிழமை இரங்கல் தெரிவித்தனர்.
“இன்று, எங்கள் இதயங்கள் இந்தியாவுடன் உள்ளன. பாலம் இடிந்ததில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஜில் மற்றும் நானும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம், மேலும் பல உயிர்களை இழந்ததற்காக குஜராத் மக்களுடன் இணைந்து துக்கப்படுகிறோம், ”என்று பிடன் கூறினார்.
அமெரிக்காவும் இந்தியாவும் இன்றியமையாத பங்காளிகள், தங்கள் குடிமக்களுக்கு இடையே ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளன. இந்த கடினமான நேரத்தில், நாங்கள் தொடர்ந்து இந்திய மக்களுடன் நிற்போம் மற்றும் ஆதரவளிப்போம்" என்று பிடன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“குஜராத் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் இந்திய மக்களுடன் நாங்கள் நிற்கிறோம். அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் இதயங்கள் உள்ளன, ”என்று கமலா ஹாரிஸ் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள இந்துக்கள் புத்திசாலிகள்
இங்கிலாந்தில் உள்ள இந்துக்கள் "புத்திசாலிகள், பணக்காரர்கள் மற்றும் நல்ல நடத்தை கொண்டவர்கள்", 2021 ஆம் ஆண்டில் நாட்டின் சிறைகளில் வெறும் 0.4 சதவீதம் மட்டுமே உள்ளனர், இது எந்த மதக் கூட்டத்திலும் மிகக் குறைவு என்று ரிஷி சுனக் பிரிட்டனின் முதல் இந்து பிரதமரான சில நாட்களுக்குப் பிறகு ஒரு ஊடகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இப்போது 983,000 இந்துக்கள் வசிக்கின்றனர், லண்டனின் கல்லறைகள் இந்துக்கள் 500 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு வருகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன.
இது ஒரு குடியேற்ற வெற்றிக் கதை. இங்கிலாந்தில் உள்ள சிறைகளில் வெறும் 329 இந்துக்கள் மட்டுமே உள்ளதாக தி டைம்ஸ் நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அவர்கள் கிறிஸ்தவர்களை விட சிறந்த தகுதியுடையவர்கள் மற்றும் அதிக வருமானம் ஈட்டுகிறார்கள். இப்போது மருத்துவரின் இரண்டாம் தலைமுறை மகன் ரிஷி சுனக் எண்.10ல் (பிரதமர் அலுவலம்) இருக்கிறார்” என்று அறிக்கை குறிப்பிட்டது.
உகாண்டாவில் இந்திய தொழிலதிபர் சுட்டுக்கொலை
உகாண்டாவின் கிசோரோ நகரில் 24 வயதான இந்திய தொழிலதிபர் ஒருவர் போலீஸ் கான்ஸ்டபிளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இறந்தவர் குந்தாஜ் படேல் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
களப் படைப் பிரிவைச் சேர்ந்த (FFU) போலீஸ் கான்ஸ்டபிள் எலியோடா குமிசாமு, 21, அக்டோபர் 27 அன்று, பிரதான வீதியில் குற்றம் நடந்த இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, கைது செய்யப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என டெய்லி மானிட்டர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர், இன்னும் கண்காணிக்கப்படாத பிற நபர்களுடன், ஹார்டுவேர் வியாபாரம் செய்யும் ஒரு இந்திய கடைக்குள் நுழைந்து, வியாழக்கிழமை மதியம் 2 மணியளவில் இந்திய தொழிலதிபரின் மார்பில் சுட்டுக் கொன்றார் என்று பிராந்திய காவல்துறை செய்தித் தொடர்பாளர் எல்லி மேட் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.